ஸஃது பின் ரபீஉ (ரலி) அவர்களின் மனைவி ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகளுடன் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவ்விருவரும் ஸஃது பின் ரபீஉ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது, உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். (அறியாமைக்கால வழமைப்படி) இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் தராமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்” என முறையிட்டார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்” எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய (4 :11.12-வது) குர்ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்பெண்களின் சிறிய தந்தையிடம் ஆளனுப்பி, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், (ஸஃதின் மனைவியான) அவ்விரு பெண்பிள்ளைகளின் தாயாருக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(திர்மிதி: 2092)بَابُ مَا جَاءَ فِي مِيرَاثِ البَنَاتِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنِي زَكَرِيَّا بْنُ عَدِيٍّ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
جَاءَتْ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ، قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا، فَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ، قَالَ: «يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ» فَنَزَلَتْ: آيَةُ المِيرَاثِ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا، فَقَالَ: «أَعْطِ ابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ، وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ، وَمَا بَقِيَ فَهُوَ لَكَ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، وَقَدْ رَوَاهُ شَرِيكٌ أَيْضًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2092.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2018.
(குறிப்பு: மேற்கண்ட வாரிசுகளுக்கு சொத்தை பங்கிடும் முறை: சொத்தை 24 பங்குகளாக பிரித்து அதில் இருபெண் பிள்ளைகளுக்கு மூன்றில் இரண்டு பாகமான 16 பங்கையும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமான 3 பங்கையும், மீதமுள்ள 5 பங்கையும் இறந்தவரின் சகோதரருக்கும் தர வேண்டும்)
- இந்த செய்தி ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து, அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அகீல் வழியாக மட்டுமே வந்துள்ளது.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25811-அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அகீல் பற்றி இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ போன்ற சில அறிஞர்களே இவர் நடுத்தரமான-(ஹஸன்) தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளனர். மேலும், இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஸ்ஹாக் பின் ராஹவைஹி, ஹுமைதீ போன்ற அறிஞர்கள் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளனர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். - இப்னு உயைனா, யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். ஜவ்ஸஜானீ, யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அபூஹாத்திம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற பல அறிஞர்களில் சிலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், சிலர் இவர் பலவீனமானவர் என்றும், சிலர் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும், சிலர் இவர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா 6/204, தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/424),… - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் அறிவிக்கும் செய்தியில் பலவீனம் உள்ளது என்று விமர்சித்துள்ளார்… (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/542) - மேற்கண்ட செய்தியை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்று கூறியுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-14798 , இப்னு மாஜா-2720 , அபூதாவூத்-2891 , 2892 , திர்மிதீ-2092 , முஸ்னத் அபீ யஃலா-2039 , தாரகுத்னீ-4093 , 4094 , 4095 , 4096 , ஹாகிம்-7954 , 7995 , குப்ரா பைஹகீ-12219 , 12311 , 12312 ,
சமீப விமர்சனங்கள்