பாடம்:
வழிகெடுக்கும் தலைவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.
மேலும் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும் வரை அவர்களை தோற்கடிக்க நினைப்போர் தீங்கிழைக்க முடியாமல் அவர்கள் மேலோங்கியவர்களாக இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் தரமாகும். இந்த செய்தியில் வரும் கூட்டத்தினர் ஹதீஸை உடையவர்கள் (ஹதீஸ்கலை அறிஞர்கள்) என்று அலீ பின் மதீனீ அவர்கள் கூறியதாக புகாரீ இமாம் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(திர்மிதி: 2229)بَابُ مَا جَاءَ فِي الْأَئِمَّةِ الْمُضِلِّينَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ المُضِلِّينَ»، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ يَخْذُلُهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»
وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، سَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ: سَمِعْتُ عَلِيَّ بْنَ المَدِينِيِّ يَقُولُ: _ وَذَكَرَ هَذَا الْحَدِيثَ _ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الحَقِّ» فَقَالَ عَلِيٌّ: هُمْ أَهْلُ الحَدِيثِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2229.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2102.
சமீப விமர்சனங்கள்