தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2396

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(திர்மிதி: 2396)

بَابُ مَا جَاءَ فِي الصَّبْرِ عَلَى البَلَاءِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الخَيْرَ عَجَّلَ لَهُ العُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَ بِهِ يَوْمَ القِيَامَةِ»

وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ عِظَمَ الجَزَاءِ مَعَ عِظَمِ البَلَاءِ، وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا، وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2319.
Tirmidhi-Shamila-2396.
Tirmidhi-Alamiah-2319‎.
Tirmidhi-JawamiulKalim-2332.




إسناده حسن رجاله ثقات عدا سعد بن سنان الكندي وهو صدوق له أفراد

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸஃத் பின் ஸினான் அல்லது ஸினான் பின் ஸஃத் என்பவர் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர்…

2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸஃத் பின் ஸினான் —> அனஸ் (ரலி) 

பார்க்க: திர்மிதீ-2396 , முஸ்னத் அபீயஃலா-4254 , 4255 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2050 , ஹாகிம்-8799 ,

….இப்னு மாஜா-4031 , திர்மிதீ-2396 , முஸ்னத் அபீ யஃலா-4253 ,

  • இஸ்ஹாக் பின் அஸ்ரக் —> ஈஸா —> அனஸ் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3228 ,

  • அப்துல்லாஹ் பின் பக்ர் —> ஸுலைமான் —> அனஸ் (ரலி) 

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4222 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-16806 .

3 comments on Tirmidhi-2396

  1. இவர் ஹதீஸ் முன்கர் என்றும் மற்றோரு முறை பலவீனமானவர் என்றும் இமாம் நஸாயி(ரஹ்) கூறுகிறார்கள்

    நூல்-லயீஃபா அல் மத்ரூகூன்

    இப்ராஹீம் இப்னு யாகூப் கூறுகிறார்கள்:
    இவரது செய்திகள் பலவீனமானது. இவரது செய்திகள் அனஸ்(ரலி) அவர்களிமிருந்து அறிவித்தவர்களின் ஹதீஸுக்கு ஒத்ததாக இல்லை.

    அபூதாவூத் (ரஹ்) கூறுகிறார்கள்:
    இமாம் அஹ்மத் இவரது ஹதீஸ்களை எழுதவில்லை.

    அஹ்மத் இப்னு ஹம்பல்(ரஹ்) கூறுகிறார்கள்:
    இவரது செய்திகளை நான் விட்டுவிட்டேன். ஏனெனில் இவரது செய்திகள் குழப்பமானவை மேலும் பாதுகாக்கபடாதவை.

    முஹம்மத் இப்னு சஆத் கூறுகிறார்கள்
    இவரது செய்திகள் முன்கர்
    யஹ்யா இப்னு மயீன்(ரஹ் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      மேற்கண்ட செய்தியை சிலர் பலவீனமானது என்றும் சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர்.
      முன்கர் என்று விமர்சிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட செய்திகளில் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்திருப்பதால் அறிஞர்கள் அவ்வாறு கூறுவார்கள். அவர் நம்பகமானவர் என்பவராக இருந்தால் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளாரா இல்லையா என்று பார்த்தே முடிவு செய்யவேண்டும்.

      குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது என்பதை விட இந்த கருத்து வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஒரு செய்தி பற்றியும், ஒரு அறிவிப்பாளர் பற்றியும் மாறுபட்ட கருத்து இருக்கும் போது அதற்கான ஆதாரங்கள் சரியானதா என்று பார்க்க வேண்டும் என்பதால் இந்த செய்தி பற்றி முழு தகவல் பதிவு செய்ய சற்று தாமதமாகலாம்.

      1. மேற்கூறிய செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமாக இருப்பினும் இந்த செய்தி வேறு சில அறிவிப்பாளர் தொடரில் அனஸ்(ரலி) அவர்களை தொட்டு வந்துள்ளது..

        இன்னும் வேறு சில நபிதோழர் வழியாக இதே கருத்துடைய செய்தி சற்று விரிவாக வந்துள்ளதால் அது தரத்தை வைத்து இது ஹஸன் அல்லது ஹஸன் ஸஹீஹ் அடையலாம்…

        இன்ஷா அல்லாஹ் சகோதரரே உங்களுடைய முழு தகவல்காக காத்திருக்கிறோம்..

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.