அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நரகத்தின் நிலைகளைப் பற்றிய பாடங்கள்.
பாடம்:
நரகத்தைப் பற்றிய வர்ணனை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
(அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ அவர்களிடமிருந்து அறிவிக்கும்) ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், இந்த செய்தியை நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை என்று (எனது ஆசிரியர்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் கூறினார்.
இவ்வாறே (எனது ஆசிரியர்) அப்து பின் ஹுமைத் என்பவரும் ஸவ்ரீ வழியாக (நபித்தோழரின் கூற்றாக அறிவித்தார்). நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை.
(திர்மிதி: 2573)37 – أَبْوَابُ صِفَةِ جَهَنَّمَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ النَّارِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ العَلَاءِ بْنِ خَالِدٍ الكَاهِلِيِّ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: «وَالثَّوْرِيُّ لَا يَرْفَعُهُ»
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو أَبُو عَامِرٍ العَقَدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ العَلَاءِ بْنِ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ «وَلَمْ يَرْفَعْهُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2573.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2513.
சமீப விமர்சனங்கள்