பாடம்:
செவியுற்றதைப் பிறருக்கு எடுத்துரைக்குமாறு தூண்டும் விதமாக வந்துள்ளவை.
அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (உமய்யா ஆட்சியாளர்) மர்வான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களிடமிருந்து நண்பகல் நேரத்தில் புறப்பட்டு வந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் ‘ஸைத் பின் ஸாபித் அவர்களிடம் ஏதோ ஒன்றைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு மர்வான் அவர்கள் ஆளனுப்பியிருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு, நாங்கள் எழுந்து சென்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமே அதைப் பற்றிக் கேட்டோம்.
அப்போது ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஆம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற பல செய்திகளைப் பற்றி மர்வான் எம்மிடம் கேட்டார்.
“நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவிலிருத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி), அபுத்தர்தா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
(திர்மிதி: 2656)بَابُ مَا جَاءَ فِي الحَثِّ عَلَى تَبْلِيغِ السَّمَاعِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سُلَيْمَانَ، مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ بْنِ عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ:
خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ، مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ، قُلْنَا: مَا بَعَثَ إِلَيْهِ هَذِهِ السَّاعَةَ إِلَّا لِشَيْءٍ يَسْأَلُهُ عَنْهُ، فَقُمْنَا فَسَأَلْنَاهُ، فَقَالَ: نَعَمْ، سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ غَيْرَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ»
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ، وَأَبِي الدَّرْدَاءِ، وَأَنَسٍ: «حَدِيثُ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدِيثٌ حَسَنٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2656.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2599.
சமீப விமர்சனங்கள்