நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை மனனமிட்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஏனெனில் (என்னிடமிருந்து) கல்விபெறும் சிலர், தன்னை விட புலமையுடையவர்களிடம் கல்வியை சேர்த்துவிடக்கூடும். கல்வியுடையவர்களில் சிலர் அதில் புலமைபெறாமலும் இருக்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
(அபூதாவூத்: 3660)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي عُمَرُ بْنُ سُلَيْمَانَ، مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا، فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3660.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3177.
பஸ்ஸார் 3416
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹதீஸ் எண் வேறுபடும் என்பதால் ஹதீஸின் கருத்தைக் குறிப்பிடவும்.
என்னுடைய வார்த்தைகளைச் செவியேற்று அதைப் மனனம்
செய்து அதைச் செவியேற்றவாறே யார் எடுத்துரைக்கின்றார்களோ
அவர்களைக் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.
ஜுபைர் இப்னு முத்யிம்
முஸ்னதுல் பஸ்ஸார் 3416
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: இப்னு மாஜா-231.
முஸ்னத் பஸ்ஸார்-3414, 3415, 3416 இந்த மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் உள்ள முக்கிய விமர்சனம் முஹம்மத் பின் இஸ்ஹாக் சில செய்திகளில் தத்லீஸ் செய்துள்ளதாலும், சில செய்திகளில் பலவீனமானவர்கள் உள்ளதாலும் இவை பலவீனமானவையாகும்.புகாரீ-67, திர்மிதீ-2656 பார்க்கவும்.