நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு அல்லாஹ் ஒரு புத்தகத்தை எழுதினான். அதிலிருந்து இரு வசனங்களை சூரா அல்பகராவின் இறுதியில் அல்லாஹ் அருளியுள்ளான். மூன்று இரவுகள் ஒரு வீட்டில் அவை ஓதப்பட்டால் அவ்வீட்டை ஷைத்தானால் நெருங்க முடியாது.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
(திர்மிதி: 2882)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الجَرْمِيِّ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ الجَرْمِيِّ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ، أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ، وَلَا يُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2807.
Tirmidhi-Shamila-2882.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் “விபரம் கீழே” என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விபரமும் காணப்படவில்லையே? தவறுதலாக விடுபட்டிருந்தால் தயவுசெய்து விபரத்தை பதிவு செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
வ அலைக்கும் ஸலாம். இதுபோன்ற தகவலுடன் வேறு விளக்கம் இல்லாவிட்டால் இதுபற்றிய செய்திகளை இன்னும் ஒன்று சேர்க்கவில்லை என்று புரிந்துக் கொள்ளுங்கள்.
இதன் தரம் குறித்து இரு கருத்துக்கள் உள்ளன. சிலர் இதை ஹஸன் தரம் என்றும், சிலர் பலவீனம் என்றும் கூறியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் இதை விரிவாக பிறகு பதிவு செய்கிறோம்.
சில ஹதீஸ்களுக்கு “ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதுபோல் இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லையே என்பதால்தான் அதன் “விபரம் கீழே” என்று தலைப்பில் கொடுத்துவிட்டு அந்த விபரத்தை பதிவு செய்யாமல் தவறுதலாக விட்டுள்ளீர்கள் என்று நினைத்துக் கேட்டோம். இன்ஷா அல்லாஹ் நீங்கள் பதிவு செய்த பிறகு பார்க்கிறோம்
பரவாயில்லை ஜீ. நீங்களும் மற்றவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே தகவலாக கூறினோம்.
நாம் ஹதீஸைப் பதிவிடும் போது default ஆக “விபரம் கீழே” என்றே இருக்கும்.
Default வார்த்தையை “ஆய்வில் உள்ளது” என்று கொடுத்துவிட்டு, ஆய்வு முடிந்த பிறகு “விபரம் கீழே” என்று கொடுத்தால், எங்கே விபரத்தைக் காணோம் என்று மக்கள் குழம்பாமல் பயனுள்ளதாக இருக்குமே பாய்? ஒரு Suggestion தான், தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
சரிங்க ஜீ, இன்ஷா அல்லாஹ் நீங்கள் சொல்வது போன்றே அமைத்துக் கொள்ளலாம். ஜஸாகல்லாஹு கைரா.
வஅன்த்த ஃபஜஸாக்கல்லாஹு ஹைரன்… ஜீ