தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2891

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

குர்ஆனில் முப்பது வசனங்களைக் கொண்ட அத்தியாயம் உள்ளது. அது மனிதனுக்குப் பரிந்துரை செய்யும். இதனால் அவன் பாவங்கள் மன்னிக்கப்படும். அதுதான் தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க் என்ற அத்தியாயமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 2891)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبَّاسٍ الجُشَمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ سُورَةً مِنَ القُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2891.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2835.




இந்தச் செய்தியையும், இந்தக் கருத்தில் சில நபித்தோழரின் கூற்றாக வந்துள்ள செய்திகளையும் இணைத்தே இந்தச் செய்தியை சிலர் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர். எனவே இது ஹஸன் லிஃகைரிஹீ என்ற அடிப்படையில் கூறப்பட்டதாகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20831-அப்பாஸ் அல்ஜுஷமீ-அப்பாஸ் பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி…


(இதன் அறிவிப்பாளர் தொடரில் عبد الله بن العباس الجشمي –  என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவருடைய நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களைத் தவிர வேறு யாரும் கூறவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் மட்டும், ”இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம்)


அப்பாஸ் அல்ஜுஷமீ என்பவர், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடம் செவியேற்றார் என்று அறியப்படவில்லை என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தனது அத்தாரீகுல் கபீர் என்ற நூ­லில் கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.

(தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 233)

என்றாலும், புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவ்வாறு கூறியதாக தாரீகுல் கபீரின் பிரதிகளில் நாம் காணவில்லை.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7975 , 8276 , இப்னு மாஜா-3786 , அபூதாவூத்-1400 , திர்மிதீ-2891 , முஸ்னத் பஸ்ஸார்-9504 , 9505 , குப்ரா நஸாயீ-10478 , 11548 , இப்னு ஹிப்பான்-787 , 788 , ஹாகிம்-2075 , 3838 ,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3654 .


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2890 .


4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-10479 .


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.