தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2890

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ர் என்று அறியாமல் கூடாரம் அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ”தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்…” எனத் துவங்கும் (அல்குர்ஆன்: 67:1-30) அத்தியாயத்தை முழுமையாக ஓதி முடித்தார். இதைக் கண்ட அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் கப்ர் என்று அறியாமல் என் கூடாரத்தை கப்ரில் அமைத்து விட்டேன். அப்போது கப்ரில் இருந்த ஒரு மனிதர் தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க் என்பதை முழுமையாக ஓதி முடித்தார்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அந்த அத்தியாயம் தடுக்கக் கூடியது; கப்ருடைய வேதனையை நீக்கக்கூடியது” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வரும் இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 2890)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَمْرِو بْنِ مَالِكٍ النُّكْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الجَوْزَاءِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

ضَرَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِبَاءَهُ عَلَى قَبْرٍ وَهُوَ لَا يَحْسِبُ أَنَّهُ قَبْرٌ، فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ حَتَّى خَتَمَهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي ضَرَبْتُ خِبَائِي عَلَى قَبْرٍ وَأَنَا لَا أَحْسِبُ أَنَّهُ قَبْرٌ، فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ المُلْكِ حَتَّى خَتَمَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ المَانِعَةُ، هِيَ المُنْجِيَةُ، تُنْجِيهِ مِنْ عَذَابِ القَبْرِ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2890.
Tirmidhi-Alamiah-2815.
Tirmidhi-JawamiulKalim-2834.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்மலிக்

3 . யஹ்யா பின் அம்ர் அந்நுக்ரீ

4 . அம்ர் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அந்நுக்ரீ

5 . அபுல்ஜவ்ஸாஃ-அவ்ஸ் பின் அப்துல்லாஹ்

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48515-யஹ்யா பின் அம்ர் அந்நுக்ரீ என்பவர் பற்றி, ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஸுர்ஆ, பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் தனது தந்தையிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் இவரின் தவறாக இருக்கலாம் அல்லது இவரின் தந்தையின் தவறாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் அதிகமான செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். இவை மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெறத்தக்க செய்திகள் அல்ல என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் மட்டுமே, இவரை மிகவும் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை பலவீனமானவர் என்றும்; ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/176, அல்காமிலு ஃபிள்ளுஅபா-9/37, தஹ்தீபுல் கமால்-31/477, அல்இக்மால்-12/350, அல்காஷிஃப்-4/493, தஹ்தீபுத் தஹ்தீப்-4-/379, தக்ரீபுத் தஹ்தீப்-1/1063)


  • 2 . மேலும் இதில் வரும் இவரின் தந்தையான ராவீ-32496-அம்ர் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அந்நுக்ரீ
    என்பவர் பற்றி, இவர் தவறிழைப்பவர்; அரிதான செய்திகளை அறிவிப்பவர்; இவரின் மகனிடமிருந்து அறிவிக்கப்படும் செய்திகளைத் தவிர மற்றவைகளை ஏற்கலாம் என்று கருத்தில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர். மற்றவர்களின் செய்திகளை தன் செய்திகளாக அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்றும், சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜரின் தக்ரீபுத் தஹ்தீபை ஆய்வுச் செய்தவர்கள் ஸதூக்-ஹஸன்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற தரத்தில் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அஸ்ஸிகாத்-7/228, அல்காமிலு ஃபிள்ளுஅபா-6/258, தஹ்தீபுல் கமால்-22/211, அல்இக்மால்-10/251, தஹ்தீபுத் தஹ்தீப்-3/301, தக்ரீபுத் தஹ்தீப்-1/744, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-5104, 2/105)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இந்தச் செய்தியின் இறுதிப் பகுதி ஹஸன் தரத்தில் தபகாதுல் முஹத்திஸீன் எனும் நூலில் வந்துள்ளதாக அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1140)

என்றாலும் அந்தச் செய்தியிலும் விமர்சனம் உள்ளது.


طبقات المحدثين بأصبهان والواردين عليها-محققا (4/ 10)
(782) حدّثنا إسحاق، قال: ثنا أحمد بن منيع في كتاب «فضائل القرآن»، قال: ثنا أبوأحمد الزبيري، قال: ثنا سفيان، عن عاصم، عن زر، عن عبد الله، قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ:
«سورة تبارك هي المانعة من عذاب القبر».

இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள் வழியாக வரும் செய்திகளில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள செய்திகள் தான் உண்மை என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க: குப்ரா நஸாயீ-10479)


3. இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2890, முஸ்னத் பஸ்ஸார்-5300, அல்முஃஜமுல் கபீர்-12801, ஷுஅபுல் ஈமான்-2280, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-2970,


மேலும் பார்க்க: திர்மிதீ-2891.

3 comments on Tirmidhi-2890

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.