தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2914

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்தச் செய்தியை புன்தார்-முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> ஆஸிம் … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.

(திர்மிதி: 2914)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، وَأَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

يُقَالُ – يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ -: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2914.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.