தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3000

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஉமாமா (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரின் படிகளில் (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) சில தலைகள் நடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இவை நரகத்தின் நாய்கள். வானத்தின் கீழ் கொல்லப்பட்டவர்களிலேயே இவர்கள்தான் மிகக் கொடியவர்கள். யாரை இந்த காரிஜிய்யாக்கள் கொன்றார்களோ அவர்கள்தான் கொல்லப்பட்டவர்களில் சிறந்தவர்கள்.

பின்னர் அவர்கள், “அன்று சில முகங்கள் வெண்மையாகவும், சில முகங்கள் கருமையாகவும் இருக்கும்” எனும் (அல்குர்ஆன்: 3:106) ஆவது வசனத்தை அதன் இறுதி வரை ஓதினார்கள்.

நான் அபூஉமாமா (ரலி) அவர்களிடம், “இதனை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டீங்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் இதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது நான்கு முறை (ஏழு முறை வரை எண்ணினார்) கேட்டிராவிட்டால், உங்களுக்கு இதை அறிவித்திருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

(திர்மிதி: 3000)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي غَالِبٍ، قَالَ:

رَأَى أَبُو أُمَامَةَ رُءُوسًا مَنْصُوبَةً عَلَى دَرَجِ دِمَشْقَ، فَقَالَ أَبُو أُمَامَةَ: «كِلَابُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ، خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ»، ثُمَّ قَرَأَ: {يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ} [آل عمران: 106] إِلَى آخِرِ الآيَةِ، قُلْتُ لِأَبِي أُمَامَةَ: أَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ لَمْ أَسْمَعْهُ إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا أَوْ أَرْبَعًا حَتَّى عَدَّ سَبْعًا مَا حَدَّثْتُكُمُوهُ

هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَأَبُو غَالِبٍ اسْمُهُ: حَزَوَّرٌ، وَأَبُو أُمَامَةَ البَاهِلِيُّ اسْمُهُ: صُدَيُّ بْنُ عَجْلَانَ وَهُوَ سَيِّدُ بَاهِلَةَ “


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3000.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்தில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3344,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.