தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3233

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இன்று இரவு என் இறைவன் மிக அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்தான். – இது கனவில் நிகழ்ந்தது என்று நான் எண்ணுகிறேன் –

அவன் கூறினான்: ‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது!’ என்று கூறினேன்.

பிறகு, அவன் தன்னுடைய கையை என் இரு தோள்களுக்கிடையே வைத்தான். அதன் குளிர்ச்சியை என் மார்பு அல்லது என் கழுத்தின் மீது நான் உணர்ந்தேன். அதன் மூலம் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிந்துகொண்டேன்.

பிறகு அவன் மீண்டும், ‘‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் (இப்போது) அறிவீரா?’ என்று கேட்டான். நான் ‘ஆம், அவர்கள் பாவங்களை அழிக்கும் செயல்களைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று கூறினேன்.

அந்தப் பாவங்களை அழிக்கும் செயல்கள்:

தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் (சிறிது) நேரம் இருத்தல்.
ஜமாஅத் தொழுகைக்காக கால்நடையாக நடந்து செல்லுதல்.
சிரமமான நேரங்களிலும் முழுமையாக உளூ செய்தல்.

யார் இவற்றைச் செய்கிறாரோ, அவர் நல்ல முறையில் வாழ்வார். நல்ல முறையில் மரணிப்பார். மேலும், அவரது தாய் அவரைப் பெற்றெடுக்கும் நாளில் இருந்தது போல பாவங்களிலிருந்து சுத்தமானவராக ஆவார்.

மேலும் அல்லாஹ் கூறினான்:

‘முஹம்மதே! நீர் தொழுகை முடித்தபின், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஃபிஃலல் கைராத்தி, வ தர்கல் முன்கராத்தி, வ ஹுப்பல் மஸாகீன். வ இதா அரத்த பிஇபாதிக ஃபித்னதன் ஃபக்பிள்னீ இலைக ஃகைர மஃப்தூன்” என்று கூறுவீராக!

(பொருள்: அல்லாஹ்வே! நன்மையான காரியங்களைச் செய்யவும், தீய காரியங்களை விட்டு விலகவும், ஏழைகளை நேசிக்கவும் உன்னிடம் நான் கேட்கிறேன். உன்னுடைய அடியார்களை சோதிக்க நீ நாடினால், என்னை சோதனையில் சிக்காத நிலையில் உன்பக்கம் எடுத்துக் கொள்வாயாக.)

மேலும், சொர்க்கத்தின் உயர் பதவிகள் கிடைப்பதற்கு செய்யும் செயல்கள்:

ஸலாம் கூறுவதை பரவலாக்குவது,
பசித்தோருக்கு உணவளிப்பது,
மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் தொழுவது ஆகியவை ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

வேறு சில அறிவிப்பாளர்கள் இந்த ஹதீஸில் அபூகிலா அவர்களுக்கும், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு மனிதரை கூறியுள்ளனர்.

கதாதா (ரஹ்) அவர்கள், அபூகிலாபா —> காலித் பின் லஜ்லாஜ் —> அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்.

(திர்மிதி: 3233)

حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” أَتَانِي اللَّيْلَةَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ، – قَالَ أَحْسَبُهُ فِي الْمَنَامِ – فَقَالَ: يَا مُحَمَّدُ هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ ” قَالَ: ” قُلْتُ: لَا “، قَالَ: «فَوَضَعَ يَدَهُ بَيْنَ كَتِفَيَّ حَتَّى وَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ» أَوْ قَالَ: ” فِي نَحْرِي، فَعَلِمْتُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ، قَالَ: يَا مُحَمَّدُ، هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: نَعَمْ، فِي الكَفَّارَاتِ، وَالكَفَّارَاتُ المُكْثُ فِي المَسَاجِدِ بَعْدَ الصَّلَاةِ، وَالْمَشْيُ عَلَى الْأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ، وَإِسْبَاغُ الوُضُوءِ فِي المَكَارِهِ، وَمَنْ فَعَلَ ذَلِكَ عَاشَ بِخَيْرٍ وَمَاتَ بِخَيْرٍ، وَكَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِذَا صَلَّيْتَ فَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الخَيْرَاتِ، وَتَرْكَ المُنْكَرَاتِ، وَحُبَّ المَسَاكِينِ، وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً فَاقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ، قَالَ: وَالدَّرَجَاتُ إِفْشَاءُ السَّلَامِ، وَإِطْعَامُ الطَّعَامِ، وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ “

«وَقَدْ ذَكَرُوا بَيْنَ أَبِي قِلَابَةَ، وَبَيْنَ ابْنِ عَبَّاسٍ فِي هَذَا الحَدِيثِ رَجُلًا» وَقَدْ رَوَاهُ قَتَادَةُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ خَالِدِ بْنِ اللَّجْلَاجِ، عَنْ ابْنِ عَبَّاسٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3157.
Tirmidhi-Shamila-3233.
Tirmidhi-Alamiah-3157.
Tirmidhi-JawamiulKalim-3176.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.