தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3370

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

3370. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : (ரலி)

அபூ ஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ العَظِيمِ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ حَدِيثِ عِمْرَانَ القَطَّانِ، وَعِمْرَانُ القَطَّانُ هُوَ ابْنُ دَاوَرَ وَيُكْنَى أَبَا العَوَّامِ» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عِمْرَانَ القَطَّانِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3292.
Tirmidhi-Shamila-3370.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3316.



இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.

முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்…….

இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான ”இம்ரான் அல்கத்தான்” என்பவர் பலவீனமானவர் ஆவார்.

”இவர் உறுதியானவர் இல்லை” என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்………..

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8748 , அல்அதபுல் முஃப்ரத்-712 , இப்னு மாஜா-3829 , திர்மிதீ-3370 , இப்னு ஹிப்பான்-870 , ஹாகிம்-1801 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.