தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3372

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

3372. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

நுஃமான் பின் பஷீர் (ரலி)

النعمان بن بشير بن سعد

இறப்பு: ஹிஜ்ரி 65, ஹோம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: நுஃமான் பின் பஷீர் பின் ஸஅத் பின் ஸஃலபா பின் ஜிலாஸ் பின் ஸைத் பின் மாலிக் பின் ஸஃலபா பின் கஅப்

தந்தை பெயர்: பஷீர் பின் ஸஅத்

வம்சம்: அன்ஸாரீ, கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம், கூஃபா, திமிஷ்க், ஹோம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரி 1, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 65, ஹோம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இவர் ஹிஜ்ரி 1 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். ஹிஜ்ரத்திற்குப் பிறகு அன்ஸாரிகளில் மதீனாவில் பிறந்த முதல் குழந்தை இவரே. இவர் கூஃபாவின் ஆளுநராகவும், திமிஷ்க்கின் நீதிபதியாகவும் பணியாற்றினார்.

பின்னர் ஹோம்ஸின் ஆளுநராகவும் இருந்தார். ஹிஜ்ரி 65 ஆம் ஆண்டு ஹோம்ஸில் கொல்லப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அப்துல்லாஹ் பின் ரவாஹா, உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஹர் பின் அப்துல்லாஹ் அல்ஹராஸீ, ஹபீப் பின் ஸாலிம், ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், கைஸமா பின் அப்துர்ரஹ்மான் அல்ஜஃஃபீ, ஸாலிம் பின் அபில் ஜஅத் அல்கதஃபானீ, ஸிமாக் பின் ஹர்ப், ஆமிர் அஷ்ஷஅபீ, உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்ஃபா, உர்வா பின் அஸ்ஸுபைர், அல்ஐஸார் பின் ஹுரைத் அல்அப்தீ, முஹம்மத் பின் நுஃமான் பின் பஷீர், அபூ இஸ்ஹாக் அஸ்ஸுபைஈ

வேறு பெயர்கள்: அந்நுஃமான்


ஆதாரம்: muslimscholars.info (274) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الدُّعَاءُ هُوَ العِبَادَةُ» ثُمَّ قَرَأَ: {وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60]

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ ذَرٍّ، وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ذَرٍّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3294.
Tirmidhi-Shamila-3372.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3318.



மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18352 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.