பாடம்:
துன்பம் நீங்கும் வரை பிரார்த்தனை செய்து இறையருளை எதிர்பார்ப்பது…
அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(திர்மிதி: 3571)بَاب فِي انْتِظَارِ الفَرَجِ وَغَيْرِ ذَلِكَ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ العَقَدِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ، وَأَفْضَلُ العِبَادَةِ انْتِظَارُ الفَرَجِ»
هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الحَدِيثَ، وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ، وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ: الصَّفَّارُ لَيْسَ بِالحَافِظِ، وَرَوَى أَبُو نُعَيْمٍ، هَذَا الحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ رَجُلٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3494.
Tirmidhi-Shamila-3571.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3523.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13971-ஹம்மாத் இப்னு வாகித் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே ”இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை” என்று விமர்சித்துள்ளார்கள்.
- மேலும் இந்த செய்தியை இஸ்ராயில் அவர்களிடமிருந்து அபூநுஐம் அவர்களும் அறிவித்துள்ளார். அதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு மனிதர் அறிவித்தார் என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பாளர் தொடர் தான் உண்மை என திர்மிதீ அவர்கள் குறிப்பிடுகிறார். இதில் வரும் ராவீ-13835-ஹகீம் பின் ஜுபைர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இந்த செய்தி மிக பலவீனமானது என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-492)
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3571 , அல்முஃஜமுல் கபீர்-10088 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5169 , ஷுஅபுல் ஈமான்-1086 , 9535 ,
…….
சமீப விமர்சனங்கள்