தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3968

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும், அவசரப்படாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! “அவசரப்படுதல்” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒருவர் நான் பிரார்த்தித்தேன்.ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறுவதாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 3968)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ هُوَ ابْنُ أَبِي سُلَيْمٍ، عَنْ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا مِنْ رَجُلٍ يَدْعُو اللَّهَ بِدُعَاءٍ إِلَّا اسْتُجِيبَ لَهُ، فَإِمَّا أَنْ يُعَجَّلَ فِي الدُّنْيَا، وَإِمَّا أَنْ يُدَّخَرَ لَهُ فِي الآخِرَةِ، وَإِمَّا أَنْ يُكَفَّرَ عَنْهُ مِنْ ذُنُوبِهِ بِقَدْرِ مَا دَعَا، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ أَوْ يَسْتَعْجِلْ». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْتَعْجِلُ؟ قَالَ: ” يَقُولُ: دَعَوْتُ رَبِّي فَمَا اسْتَجَابَ لِي

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3968.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3561.




إسناد ضعيف فيه الليث بن أبي سليم القرشي وهو ضعيف الحديث ، وزياد الطائي وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் அபீ ஸுலைம் பலவீனமானவர்.

صدوق اختلط جدا ، ولم يتميز حديثه فترك
تقريب التهذيب: (1 / 817)

மேலும் பார்க்க : முஸ்னத் அஹ்மத்-11133 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.