தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3966

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மாலை நேரத்தில், “அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்” என்று மூன்று முறை கூறினால் அந்த இரவில் எந்த விஷக்கடியும் அவரை துன்புறுத்தாது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலமாக அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எங்களின் குடும்பத்தினர் இப்பிரார்த்தனையை கற்றுக் கொண்டார்கள். மேலும் அதனை ஒவ்வொரு இரவிலும் வழக்கமாகச் சொல்லி வந்தார்கள். அந்நிலையில் அவர்களிலுள்ள பெண்ணொருத்தியை விஷ ஜந்து தீண்டிவிட்டது. அதனால் அவளுக்கு வலியேதும் ஏற்படவில்லை.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இதே அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். இவ்வாறே ஸுஹைல் (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களும் மற்றவர்களும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள். எனினும் அவர்கள் (அறிவிப்பாளர்தொடரில்) அபூஹுரைரா (ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை.

(திர்மிதி: 3966)

بَابٌ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

” مَنْ قَالَ حِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ حُمَةٌ تِلْكَ اللَّيْلَةَ ” قَالَ سُهَيْلٌ: فَكَانَ أَهْلُنَا تَعَلَّمُوهَا فَكَانُوا يَقُولُونَهَا كُلَّ لَيْلَةٍ فَلُدِغَتْ جَارِيَةٌ مِنْهُمْ فَلَمْ تَجِدْ لَهَا وَجَعًا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ، هَذَا الحَدِيثَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَى عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَغَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ عَنْ سُهَيْلٍ، وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3529.
Tirmidhi-Shamila-0/3966.
Tirmidhi-Alamiah-3529.
Tirmidhi-JawamiulKalim-3559.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.