தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-422

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 197

ஃபஜ்ருக்கு முந்தைய  (சுன்னத்) இரண்டு ரக்அத்ளைத் தவறவிட்டவர், ‘ஃபஜ்ர்’ தொழுகைக்குப் பின் அவற்றைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.

  (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்த போது (சுப்ஹுத்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து நானும் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன்.

தொழுகை முடிந்து திரும்பிய நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) நான் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ”கைஸே! சற்றுப் பொறும்! ஒரு நேரத்தில் (கடமையான) இரண்டு தொழுகைகளா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. (அதைத்தான் இப்போது தொழுகிறேன்)” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால் தவறில்லை” என்றார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ், ஸஅத் பின் ஸயீத் (எனும் விமர்சனத்திற்குரிய அறிவிப்பாளர்) வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

`ஸஅத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் வழியாகவும் ஓர் அறிவிப்பு வந்துள்ளது. அதில் நபித்தோழர் பெயர் குறிப்பிடாமல் ‘முர்ஸல்’ ஹதீஸாகவே வந்துள்ளது” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், “ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் சூரியன் உதயமாவதற்குமுன் (ஃபஜ்ருடைய முன்சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவதில் தவறில்லை” என மக்காவைச் சேர்ந்த அறிஞர்களில் ஒரு குழுவினர் கூறியுள்ளனர்.

அறிவிப்பாளர் ஸஅத் பின் ஸயீத் (ரஹ்) அவர்கள் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்களின் சகோதரர் ஆவார்கள். கைஸ் (ரலி) அவர்கள் இவர்களின் பாட்டானார் ஆவார்கள்.

கைஸ் (ரலி) அவர்களின் தந்தை பெயர் `அம்ர்’ என்றும் ‘கஹ்த்’ என்றும் (இரு விதமாகக்) கூறப்படுகிறது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஸஅத் பின் ஸயீத் (ரஹ்) அவர்களின் பாட்டனாராகிய கைஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாக இதன் அறிவிப்பாளர்தொடரில் காணப்படுகிறது. ஆனால்) கைஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் எதையும் செவியுறவில்லை. ஆகவே, இதன் அறிவிப்பாளர்தொடர் (இறுதிவரை) இணைந்ததாக இல்லை. (இது இடைமுறிவு ஏற்பட்ட ‘முன்கதிஃ’ வகையைச் சேர்ந்ததாகும்.)

முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் வழியாக ஸஅத் பின் ஸயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ”நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) புறப்பட்டுச் சென்றபோது கைஸ் (ரலி) யைக் கண்டார்கள்” என்று சிலர் அறிவித்துள்ளார்கள்.

இதுதான், ஸஅத் பின் ஸயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துல்அஸீஸ் அறிவிக்கும் செய்தியைவிட மிகச் சரியானதாகும்.

(திர்மிதி: 422)

بَابُ مَا جَاءَ فِيمَنْ تَفُوتُهُ الرَّكْعَتَانِ قَبْلَ الفَجْرِ يُصَلِّيهِمَا بَعْدَ صَلَاةِ الفَجْرِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ قَيْسٍ قَالَ:

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَصَلَّيْتُ مَعَهُ الصُّبْحَ، ثُمَّ انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَنِي أُصَلِّي، فَقَالَ: «مَهْلًا يَا قَيْسُ، أَصَلَاتَانِ مَعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أَكُنْ رَكَعْتُ رَكْعَتَيِ الفَجْرِ، قَالَ: «فَلَا إِذَنْ»،

«حَدِيثُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ حَدِيثِ سَعْدِ بْنِ سَعِيدٍ»، وقَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ: «سَمِعَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، مِنْ سَعْدِ بْنِ سَعِيدٍ هَذَا الحَدِيثَ»، «وَإِنَّمَا يُرْوَى هَذَا الحَدِيثُ مُرْسَلًا»، «وَقَدْ قَالَ قَوْمٌ مِنْ أَهْلِ مَكَّةَ بِهَذَا الحَدِيثِ، لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ الرَّكْعَتَيْنِ بَعْدَ المَكْتُوبَةِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ»: ” وَسَعْدُ بْنُ سَعِيدٍ هُوَ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، وَقَيْسٌ هُوَ جَدُّ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، وَيُقَالُ: هُوَ قَيْسُ بْنُ عَمْرٍو، وَيُقَالُ: ابْنُ قَهْدٍ، وَإِسْنَادُ هَذَا الحَدِيثِ لَيْسَ بِمُتَّصِلٍ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ لَمْ يَسْمَعْ مِنْ قَيْسٍ «، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَرَأَى قَيْسًا» وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ العَزِيزِ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-422.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-387.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1267 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.