தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1267

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறி : கைஸ் பின் அம்ர் (ரலி)

(அபூதாவூத்: 1267)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو، قَالَ:

رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ رَكْعَتَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الصُّبْحِ رَكْعَتَانِ»، فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا، فَصَلَّيْتُهُمَا الْآنَ، فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1269.
Abu-Dawood-Shamila-1267.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1077.




  • இந்தச் செய்தியில் இடம்பெறும் நபித்தோழர் கைஸ் (ரலி) அவர்களின் பெயர் பற்றி பலவாறு வந்துள்ளது:

1 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ அவர்களின் பாட்டனார் பெயர் கைஸ் பின் அம்ர் என்றும், கைஸ் பின் கஹ்த் என்றும் இருவகையாக வந்துள்ளது. இவற்றில் கைஸ் பின் அம்ர் என்பதே சரியானது என்று அறிவிப்பாளர்களின் பெயர்களைப் பற்றி ஆய்வு செய்து கூறப்படும் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஆகியோர் கைஸ் பின் அம்ர் என்று கூறியுள்ளனர். முஸ்அப் பின் அப்துல்லாஹ் என்பவர் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ  அவர்களின் பாட்டனார் பெயர், கைஸ் பின் கஹ்த் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் தான் வேறு சில அறிஞர்கள் இவரைப் பற்றிய குறிப்பில் கைஸ் பின் கஹ்த் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அபூபக்ர் பின் அபூகைஸமா அவர்கள், இது தவறு என்றும்; இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும்; யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ அவர்களின் பாட்டனார் பெயர் கைஸ் பின் அம்ர் என்றும்; இருவருமே மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-24/72, தாரீகுல் இஸ்லாம்-2/534, அல்இஸாபா-9/135, தஹ்தீபுத் தஹ்தீப்-3/451, தக்ரீபுத் தஹ்தீப்-1/805)

2 . கைஸ் பின் கஹ்த் என்பதையே சில நூல்களில் கைஸ் பின் ஃபஹ்த் என்று கூறப்பட்டுள்ளது.

3 . கைஸ் பின் ஸஹ்ல் என்று கூறப்படும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது. என்றாலும் கைஸ் பின் அம்ர் பின் ஸஹ்ல் பின் ஸஃலபா என்ற முழுப்பெயரின் அடிப்படையில் பாட்டனார் பெயருடன் இணைத்து இவ்வாறு கூறியிருக்கலாம்.

4 . கைஸ் பின் ஸஃத் என்று வந்திருப்பது தவறானது.


وقال الترمذي : ليس بمتصل محمد بن إبراهيم لم يسمع من قيس

تحفة التحصيل في المراسيل: (1 / 437)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் இப்ராஹீம், கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். காரணம் முஹம்மது பின் இப்ராஹீம் அவர்கள் அபூஸலமா போன்ற தாபிஈன்களிடமிருந்து தான் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் நபித்தோழர்களை சந்திக்கவில்லை…

இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை சிலர் சரியானது என்று கூறியிருந்தாலும் ஆய்வின் அடிப்படையில் இது முர்ஸல்-முன்கதிஃ என்று முடிவு செய்வதே சரியான கருத்தாகும்.


  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இந்த முர்ஸலான செய்தியையும், அதாஉ பின் அபூரபாஹ் வழியாக வரும் முர்ஸலான செய்தியையும் இணைத்தே இந்தச் செய்தி பலமடைகிறது என்று கூறியுள்ளார்.
  • மேலும் கைஸ் பின் ஸஹ்ல் (ரலி) வழியாக வரும் செய்தியையும், அதாஉ பின் ரபாஹ் அவர்கள், ஒரு நபித்தோழர் வழியாக அறிவிக்கும் செய்தியையும் குறிப்பிட்டுவிட்டு இது அறிவிப்பாளர்தொடர் முறிவடையாத செய்தி என்றும் கூறியுள்ளார். ஸாபித் பின் கைஸ் (ரலி) வழியாக வரும் செய்தியை ஷாஹிதாக குறிப்பிட்டுவிட்டு இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களைப் பற்றி அபுத்தய்யிப்-முஹம்மத் ஷம்ஸுல் ஹக் என்வர் தொகுத்த “இஃலாமு அஹ்லில் அஸர் பி அஹ்காமி ரக்அதயில் ஃபஜ்ர்” என்ற நூலையும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஸஹீஹ் அபூதாவூத்-அல்உம்மு-1151)

என்றாலும் இவற்றில் விமர்சனம் உள்ளது என்பதால் அதையும் குறிப்பிட வேண்டியுள்ளது…


கைஸ் பின் அமர் (ரலி) அவர்களின் மகன் ஸயீத் பின் கைஸ் என்பவர் ஆவார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர்.

1 . ஸஃத் பின் ஸயீத், 2 . அப்து ரப்பிஹ் பின் ஸயீத், 3 . யஹ்யா பின் ஸயீத்.


1 . ஸஃத் பின் ஸயீத் அவர்களின் அறிவிப்பு.

  • ஸஃத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் நுமைர், அப்துல்அஸீஸ் பின் முஹம்மத், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    ஆகியோர், ஸஃத் பின் ஸயீத் —>  முஹம்மத் பின் இப்ராஹீம் —> கைஸ் பின் அம்ர் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

முஹம்மது பின் இப்ராஹீம், கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என்பதால் இவை பலவீனமானவை.

  • ஸஃத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உமர் பின் கைஸ் என்பவர், ஸஃத் பின் ஸயீத் —>  ஹஃப்ஸ் பின் ஆஸிம் —> ஸுஹைல் பின் ஸஃத் (ரலி) (ஸஹ்ல் பின் ஸஃத் அவர்களின் சகோதரர்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(நூல்கள்: மஃரிஃபதுஸ்ஸஹாபா-இப்னு மன்தா-, மஃரிஃபதுஸ்ஸஹாபா-அபூநுஐம்-, அத்தம்ஹீத்-,)

உமர் பின் கைஸ் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் ஸஃத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து வரும் மேற்கண்ட செய்தியை பதிவு செய்த பிறகு (ஸஃத் பின் ஸயீத் அவர்களை விட பலமானவர்களான, இவரின் சகோதரர்கள்) அப்து ரப்பிஹ், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    ஆகியோர் இந்தச் செய்தியை முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதாவது தனது பாட்டனாரிடமிருந்து இதை ஹதீஸாக அறிவிக்காமல் தனது பாட்டனார் பற்றிய தகவலாக அறிவித்துள்ளனர்.
  • இதைத் தான் திர்மிதீ இமாம் அவர்கள், சிலர், ஸஃத் பின் ஸயீத் —>  முஹம்மத் பின் இப்ராஹீம் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

(பார்க்க: அபூதாவூத்-1268 , திர்மிதீ-422

  • திர்மிதீ அவர்கள், முஹம்மத் பின் இப்ராஹீம் அவர்கள் கைஸ் பின் அம்ர் (ரலி) ஹதீஸை செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் அவ்வாறு கூறவில்லை என்பதையும், ஸஃத் பின் ஸயீத் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் கூறியுள்ளனர். இந்தக் கருத்துவேறுபாட்டை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் கூறவில்லை என்றும் இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-1129 3/388)


2 . அப்து ரப்பிஹ் பின் ஸயீத் அவர்களின் அறிவிப்பு.

அப்து ரப்பிஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு ஜுரைஜ், ஹம்மாத் பின் ஸலமா ஆகியோர், அப்து ரப்பிஹ் —> கைஸ் பின் அம்ர் (ரலி) (பாட்டனார்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

(முஃஜமுஸ் ஸஹாபா-பஃகவீ-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-,

இதை தனது பாட்டனாரிடமிருந்து அறிவிக்காமல் தகவலாக அறிவித்துள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தியாகும்.


3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களின் அறிவிப்பு.

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ரபீஉ பின் ஸுலைமான், நஸ்ர் பின் மர்ஸூக் ஆகியோர், அஸத் பின் மூஸா —> லைஸ் பின் ஸஃத் —>  யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
—> ஸயீத் பின் கைஸ் —> கைஸ் பின் கஹ்த் (கைஸ் பின் அம்ர்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

லைஸ் பின் ஸஃதின் அதிகமான மாணவர்களில், அஸத் பின் மூஸா மட்டுமே இவ்வாறு தனித்து அறிவித்துள்ளார்.

இப்ராஹீம் பின் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
என்ற அறிஞர் இந்த செய்தி, யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்களுடன் நின்றுவிட்ட செய்தியாகத்தான் அஸல் நூல்களில் பார்த்துள்ளேன் என்று கூறியதாக அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ இமாம் ஆகியோர் கூறியுள்ளனர். எனவே தான் இதை இவர்கள் முர்ஸல்-முன்கதிஃ என்று கூறியுள்ளனர்.

இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
தஹாவீ,பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோரும் இந்தச் செய்தியை அஸத் பின் மூஸாவின் காரணமாக விமர்சித்துள்ளனர்.


மேலும் இதில் வரும் ஸயீத் அவர்கள் தனது தந்தை கைஸ் பின் அம்ர் அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் கூறியதாக இப்னு அபூகைஸமா கூறியுள்ளதாக இப்னு ரஜப் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-இப்னு ரஜப்-3/318)


1 . இந்தக் கருத்தில் கைஸ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • (யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்களின் சகோதரர்) அப்து ரப்பிஹ் —> கைஸ் பின் அம்ர் (ரலி) (பாட்டனார்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4016 , அஹ்மத்-23761 , அபூதாவூத்-1268 ,ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4140 ,

  • ஸஃத் பின் ஸயீத் —>  முஹம்மத் பின் இப்ராஹீம் —> கைஸ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-6440 , 36371 , அஹ்மத்-23760 , இப்னு மாஜா-1154 , அபூதாவூத்-1267 , திர்மிதீ-422 , இப்னு குஸைமா-1116 ,  ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4138 , 4139 , அல்முஃஜமுல் கபீர்-937 , தாரகுத்னீ-1440 , குப்ரா பைஹகீ-4391 , 4228

  • அஸத் பின் மூஸா —> லைஸ் பின் ஸஃத் —> யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —>  ஸயீத் பின் கைஸ் பின் கஹ்த் —> கைஸ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: இப்னு குஸைமா-1116 , தாரகுத்னீ-1439 , ஹாகிம்-1017 , குப்ரா பைஹகீ-4229 ,

  • ரபீஉ பின் ஸுலைமான் —> அஸத் பின் மூஸா —> லைஸ் பின் ஸஃத் —>  யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> ஸயீத் பின் கைஸ் —> கைஸ் பின் கஹ்த் (ரலி)

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4137 , இப்னு ஹிப்பான்-1563 , 2471

  • இஸ்மாயீல் பின் அபூகாலித் —> கைஸ் பின் அபூஹாஸிம் —> கைஸ் பின் கஹ்த் (ரலி)

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-4141 ,

  • ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    —> ஸஃத் பின் ஸயீத் —>  முஹம்மத் பின் இப்ராஹீம் —> கைஸ் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-938 ,

  • அதாஉ பின் அபூரபாஹ் —> கைஸ் பின் ஸஹ்ல்

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-939 ,


  • அதாஉ பின் அபூரபாஹ் —> ஒரு நபித்தோழர்

المحلى بالآثار (2/ 154)
[وَبِهِ إلَى ابْنِ أَيْمَنَ] ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْبِرْتِيِّ الْقَاضِي ثنا الْحَسَنُ بْنُ ذَكْوَانَ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ: «رَأَى رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – رَجُلًا يُصَلِّي بَعْدَ الْغَدَاةِ رَكْعَتَيْنِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَكُنْ صَلَّيْت رَكْعَتَيْ الْفَجْرِ، فَصَلَّيْتُهُمَا الْآنَ؟ فَلَمْ يَقُلْ [لَهُ]- عَلَيْهِ السَّلَامُ – شَيْئًا.»

இதன் அறிவிப்பாளர்தொடர், இப்னு அய்மன் என்பவருக்கு முன், இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
(நூலாசிரியர்) —> ஹம்மாம் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அப்பாஸ் பின் அஸ்பஃக்
என்று உள்ளது.

அப்பாஸ் பின் அஸ்பஃக் என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


  • ஸஃத் பின் ஸயீத் —> முஹம்மத் பின் இப்ராஹீம் —> கைஸ் பின் ஃபஹ்த் (ரலி)

பார்க்க: ஹாகிம்-1018 , குப்ரா பைஹகீ-4392


2 . ஸாபித் பின் கைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1319 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-423 , புகாரி-1169 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.