ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலுக்கு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், தொழுதுகொண்டிருந்த என்னை நோக்கித் திரும்பினார்கள். நான் தொழுதுகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் தொழுது முடித்ததும், “எங்களுடன் தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (உங்களுடன் தொழுதேன்)” என்றேன். “இது என்ன தொழுகை?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள். நான் என் வீட்டிலிருந்து புறப்படும்போது அதைத் தொழவில்லை” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி என்னைக் கண்டிக்கவில்லை.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1319)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ النَّضْرِ الْعَسْكَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مُصَفَّى، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنِ الْجَرَّاحِ بْنِ الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ الْخُرَسَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
أَتَيْتُ الْمَسْجِدَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْتَفَتَ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْظُرُ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَلَمَّا فَرَغْتُ، قَالَ: «أَلَمْ تُصَلِّ مَعَنَا؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَمَا هَذِهِ الصَّلَاةُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللهِ رَكْعَتَيِ الْفَجْرِ، خَرَجْتُ مِنْ مَنْزِلِي، وَلَمْ أَكُنْ صَلَّيْتُهُمَا، قَالَ: فَلَمْ يَعِبْ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1319.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-1304.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் நள்ர்-அல்அஸ்கரி
3 . முஹம்மத் பின் முஸஃப்பா
4 . பகிய்யது பின் வலீத்
5 . ஜர்ராஹ் பின் மின்ஹால்
6 . உஸ்மான் பின் அதாஉ பின் அபூமுஸ்லிம்-அல்குராஸானி
7 . அதாஉ பின் அப்துல்லாஹ்-இப்னு அபூமுஸ்லிம்
8 . முஹம்மத் பின் ஸாபித் (ரலி)
9 . ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10140-ஜர்ராஹ் பின் மின்ஹால் என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என்று இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்களும், இவரின் செய்திகளை எழுதக்கூடாது என்று இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோரும், இவர் முன்கருல் ஹதீஸ் என்று புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரும் விமர்சித்துள்ளனர். எனவே இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் விடப்பட்டவர் ஆவார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/523, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/406, லிஸானுல் மீஸான்-2/426)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1319, …
மேலும் பார்க்க: அபூதாவூத்-1267.
சமீப விமர்சனங்கள்