பாடம்: 198
சூரியன் உதயமான பின்னரும் ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம். இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இவ்வாறே ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்), அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.
இதே அறிவிப்பாளர்தொடரில் மிகப் பரவலாக அறியப்பட்ட (பலமான) ஹதீஸ் (மஅரூஃப்) பின்வரும் ஹதீஸாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார்.
(திர்மிதி: 423)بَابُ مَا جَاءَ فِي إِعَادَتِهِمَا بَعْدَ طُلُوعِ الشَّمْسِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ العَمِّيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ رُوِيَ عَنْ ابْنِ عُمَرَ: أَنَّهُ فَعَلَهُ، «وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ»، «وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الحَدِيثَ عَنْ هَمَّامٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا إِلَّا عَمْرَو بْنَ عَاصِمٍ الكِلَابِيَّ» وَالمَعْرُوفُ مِنْ حَدِيثِ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-423.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-388.
…தவறிவிட்ட ஃபஜ்ரின் முன் ஸுன்னத் இரண்டு ரக்அத்தை எப்போது தொழ வேண்டும்?
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் ஆஸிம் —> ஹம்மாம் பின் யஹ்யா —> கதாதா —> நள்ர் பின் அனஸ் —> பஷீர் பின் நஹீக் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: திர்மிதீ-423 , இப்னு குஸைமா-1117 , இப்னு ஹிப்பான்-2472 , தாரகுத்னீ-1436 , ஹாகிம்-1015 , 1153 , குப்ரா பைஹகீ-4231 , ஸுனன் ஸகீர்-பைஹகீ-750 , 751 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1267 , புகாரி-1169 ,
சமீப விமர்சனங்கள்