ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
(திர்மிதி: 730)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»
«حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ رُوِيَ عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَوْلُهُ، وَهُوَ أَصَحُّ، «وَهَكَذَا أَيْضًا رُوِيَ هَذَا الحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ مَوْقُوفًا وَلَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا يَحْيَى بْنُ أَيُّوبَ» وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ: لَا صِيَامَ لِمَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الفَجْرِ فِي رَمَضَانَ، أَوْ فِي قَضَاءِ رَمَضَانَ، أَوْ فِي صِيَامِ نَذْرٍ، إِذَا لَمْ يَنْوِهِ مِنَ اللَّيْلِ، لَمْ يُجْزِهِ، وَأَمَّا صِيَامُ التَّطَوُّعِ، فَمُبَاحٌ لَهُ أَنْ يَنْوِيَهُ بَعْدَ مَا أَصْبَحَ، وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ “
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-662.
Tirmidhi-Shamila-730.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-661.
[حكم الألباني] : صحيح
இமாம் திர்மிதீ அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் இந்த அறிவிப்பு சரியில்லை என்பதற்கு கூறும் காரணம் என்னவென்றால் இந்தச் செய்தியை இப்னு ஹிஷாப் ஸுஹ்ரீ வழியாக அறிவிக்கும் நம்பகமானவர்கள் நபித்தோழரின் கூற்றாகவே அறிவித்துள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக யஹ்யா பின் அய்யூப் என்பவர் மட்டும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பது தான்.
இந்தச் செய்தி நபியின் கூற்றாக ஸுஹ்ரீ வழியாக மட்டுமே வருகிறது என்று நினைத்து இதை மறுக்கின்றார். ஆனால் ஸுஹ்ரீ அல்லாத வேறு நபர்களின் வழியாகவும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் இது நபி ஸல் அவர்களின் சொல்தான் என்று உறுதியாகின்றது.
மேலும் பார்க்க: நஸாயீ-2331 .
சமீப விமர்சனங்கள்