தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-8

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மலஜலம் கழிக்கும்போது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்குவதற்கு வந்துள்ள தடை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கி அமரவும் வேண்டாம்; அதற்குப் புறம் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பி (அமர்ந்து) கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் மலஜலம் கழிக்கும்போது (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக்கொண்டோம்; (அதற்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஜஸ்உ அஸ்ஸுபைதீ (ரலி), மஃகில் பின் அபூமஃகில் எனப்படும் மஃகில் பின் அபுல்ஹைஸம் (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸே இப்பாடப் பொருளில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகானதும் ஆதாரபூர்வமானதும் ஆகும்.

அபூஅய்யூப் (ரலி) அவர்களின் இயற்பெயர் காலித் பின் ஸைத் என்பதாகும். ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ என்பதாகும். அபூபக்ர் என்பது அவரது குறிப்புப் பெயராகும்.

(இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் மாணவரான) அபுல்வலீத் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள், ‘மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்; அதற்குப் புறம் காட்டவும் வேண்டாம்’ என்று கூறியதன் பொருள், திறந்தவெளியில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்பதேயாகும். ஆனால், கட்டப்பட்ட கழிவறைகளில் கிப்லாவை முன்னோக்க அனுமதி இருக்கிறது” என்று அபூஅப்துல்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறே இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களும் தெரிவித்துள்ளார்கள்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், “(கட்டடங்களில் அவ்வாறு செய்யலாம் என்று வந்துள்ள) இந்த அனுமதி, மலஜலம் கழிக்கும்போது கிப்லாவுக்குப் புறம் காட்டலாம் என்பதற்கு மட்டுமே பொருந்தும். கட்டடமாக இருந்தாலும் கிப்லாவை முன்னோக்குவது கூடாதுதான்” என்று கூறியுள்ளார்கள். திறந்த வெளியிலோ கழிப்பறையிலோ கிப்லாவை முன்னோக்குவதற்கு அனுமதியிருப்பதாக அவர்கள் கருதவில்லை என்றே தெரிகிறது.

(திர்மிதி: 8)

بَابٌ فِي النَّهْيِ عَنِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِغَائِطٍ أَوْ بَوْلٍ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ مُسْتَقْبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ عَنْهَا، وَنَسْتَغْفِرُ اللَّهَ.

وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيِّ، وَمَعْقِلِ بْنِ أَبِي الْهَيْثَمِ، وَيُقَالُ: مَعْقِلُ بْنُ أَبِي مَعْقِلٍ، وَأَبِي أُمَامَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَسَهْلِ بْنِ حُنَيْفٍ. حَدِيثُ أَبِي أَيُّوبَ أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ. وَأَبُو أَيُّوبَ اسْمُهُ خَالِدُ بْنُ زَيْدٍ، وَالزُّهْرِيُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الزُّهْرِيُّ، وَكُنْيَتُهُ أَبُو بَكْرٍ. قَالَ أَبُو الْوَلِيدِ الْمَكِّيُّ: قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الشَّافِعِيُّ: إِنَّمَا مَعْنَى قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا»، إِنَّمَا هَذَا فِي الْفَيَافِي، فَأَمَّا فِي الْكُنُفِ الْمَبْنِيَّةِ لَهُ رُخْصَةٌ فِي أَنْ يَسْتَقْبِلَهَا، وَهَكَذَا قَالَ إِسْحَاقُ، وقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: إِنَّمَا الرُّخْصَةُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اسْتِدْبَارِ الْقِبْلَةِ بِغَائِطٍ أَوْ بَوْلٍ، فَأَمَّا اسْتِقْبَالُ الْقِبْلَةِ فَلَا يَسْتَقْبِلُهَا، كَأَنَّهُ لَمْ يَرَ فِي الصَّحْرَاءِ وَلَا فِي الْكُنُفِ أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-8.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.