பாடம்:
ஹஜருல் அஸ்வத் கல்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(திர்மிதி: 877)بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الحَجَرِ الأَسْوَدِ، وَالرُّكْنِ، وَالمَقَامِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«نَزَلَ الحَجَرُ الأَسْوَدُ مِنَ الجَنَّةِ، وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ»
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي هُرَيْرَةَ.: «حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-803.
Tirmidhi-Shamila-877.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-802.
- இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும்…
- இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைகுழம்பியவர். இவர் மூளைகுழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் ஒருவர் ஜரீர் ஆவார். (பத்ஹுல் பாரீ)
- இந்தச் செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவரிடம் ஜரீரே கேட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
- என்றாலும் ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது. (பார்க்க: நஸாயீ-2935 )
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க : அஹ்மத்-2795 , 3046 , 3537 , திர்மிதீ-877 , முஸ்னத் பஸ்ஸார்-5056 , நஸாயீ-2935 , குப்ரா நஸாயீ-3902 , …
pending….
சமீப விமர்சனங்கள்