இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ நிலையில் இருந்த போது நறுமணம் கலக்காத ஆலிவ் எண்ணையை (தமது தலையில்) தேய்ப்பார்கள்.
(திர்மிதி: 962)حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ
قَالَ أَبُو عِيسَى الْمُقَتَّتُ الْمُطَيَّبُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فَرْقَدٍ السَّبَخِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ . وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ فِي فَرْقَدٍ السَّبَخِيِّ وَرَوَى عَنْهُ النَّاسُ .
Tirmidhi-Tamil-885
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-962.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்:
நறுமணம் என்பதை குறிக்க மூலத்தில் அல் ‘முகத்தத்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நறுமணம் கலந்தது என்பது பொருளாகும்.
இது “ஃகரீப்” தரத்திலான ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸ் சையது பின் ஜுபைர் அவர்களிடம் இருந்து ஃபர்கத் அஸ் சபகி என்பார் வழியாக தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. இவரை குறித்து இமாம் யஹ்யா அவர்கள் விமர்சித்திருப்பினும் மற்றவர்கள் அவர் வழியாக அறிவித்துள்ளனர்.
சமீப விமர்சனங்கள்