அபூ ஃபாகிதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, “(வாருங்கள்) நாம் (என் புதல்வர்) ஹஸனிடம் சென்று அவரை உடல்நலம் விசாரிப்போம்” என்று கூறினார்கள். நாங்கள் (ஹஸன் (ரலி) அவர்களிடம்) சென்றபோது, அங்கு ஹஸன் (ரலி) அவர்களிடம் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டோம்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், “அபூமூஸா! நீங்கள் உடல்நலம் விசாரிக்க வந்தீர்களா? அல்லது (சாதாரணமாகச்) சந்திப்பதற்கு வந்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், “இல்லை; உடல்நலம் விசாரிக்கத்தான் வந்தேன்” என்றார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமை உடல்நலம் விசாரிப்பதற்காக ஒரு காலை நேரத்தில் சென்றால், அவருக்காக மாலை நேரம்வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். அவர் மாலை நேரத்தில் உடல்நலம் விசாரிக்கச் சென்றால், எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காகக் காலை நேரம்வரை பிரார்த்திக்கின்றனர்.
மேலும், அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு தோட்டமும் (பரிசாகக்) கிடைக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வேறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் அதை அலீ (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவித்துள்ளனர்; நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்கவில்லை. அறிவிப்பாளர் அபூ ஃபாகிதா (ரஹ்) அவர்களின் இயற்பெயர் ஸயீத் பின் இலாகா என்பதாகும்.
(திர்மிதி: 969)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ ثُوَيْرٍ هُوَ ابْنُ أَبِي فَاخِتَةَ، عَنْ أَبِيهِ، قَالَ:
أَخَذَ عَلِيٌّ بِيَدِي، قَالَ: انْطَلِقْ بِنَا إِلَى الحَسَنِ نَعُودُهُ، فَوَجَدْنَا عِنْدَهُ أَبَا مُوسَى، فَقَالَ عَلِيٌّ: أَعَائِدًا جِئْتَ يَا أَبَا مُوسَى أَمْ زَائِرًا؟ فَقَالَ: لَا بَلْ عَائِدًا، فَقَالَ عَلِيٌّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الجَنَّةِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ مِنْهُمْ مَنْ وَقَفَهُ وَلَمْ يَرْفَعْهُ وَأَبُو فَاخِتَةَ: اسْمُهُ سَعِيدُ بْنُ عِلَاقَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-891.
Tirmidhi-Shamila-969.
Tirmidhi-Alamiah-891.
Tirmidhi-JawamiulKalim-889.
சமீப விமர்சனங்கள்