தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3098

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர், நோயாளியை மாலையில் உடல் நலம் விசாரிக்கச் சென்றால், அவருடன் எழுபதாயிரம் வானவர்கள் செல்வார்கள். மேலும் அன்று காலை வரை அவருக்காக (அல்லாஹ்விடத்தில்) பாவமன்னிப்பு கேட்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும்.

அவர், நோயாளியை காலையில் உடல் நலம் விசாரிக்கச் சென்றால், அவருடன் எழுபதாயிரம் வானவர்கள் செல்வார்கள். மேலும் அன்று மாலை வரை அவருக்காக (அல்லாஹ்விடத்தில்) பாவமன்னிப்பு கேட்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் நாஃபிஃ (ரஹ்)

(அபூதாவூத்: 3098)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«مَا مِنْ رَجُلٍ يَعُودُ مَرِيضًا مُمْسِيًا، إِلَّا خَرَجَ مَعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَسْتَغْفِرُونَ لَهُ حَتَّى يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ، وَمَنْ أَتَاهُ مُصْبِحًا، خَرَجَ مَعَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَسْتَغْفِرُونَ لَهُ حَتَّى يُمْسِيَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3098.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2696.




  • அலீ (ரலி) வழியாக வரும் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. அலீ (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் மவ்கூஃபாக வரும் செய்திக்கு முதலிடம் தருகிறார். இப்னு அப்துல்பர், அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர்
    மர்ஃபூஉ வாக வரும் செய்திக்கு முதலிடம் தருகின்றனர்…

(நூல்: அல்இலலுல் வாரிதா-398 (3/267), …)

  • இதை நபித்தோழரின் கூற்று என்றாலும் கூட இந்த கருத்தை நபித்தோழர் சுயமாகவோ, அல்லது ஆய்வு செய்தோ கூறியிருக்க முடியாது என்பதால் இதையும் சிலர் நபி (ஸல்)  அவர்களின் கூற்றைப் போன்றே கருதுகின்றனர்.

கூடுதல் தகவல்…

1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹகம் —> அப்துல்லாஹ் பின் நாஃபிஃ —> அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-975 , 976 , அபூதாவூத்-30983100 ,

  • ஹகம் —> அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா —> அலீ (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-612 , இப்னு மாஜா-1442 , அபூதாவூத்-3099 ,

  • ஸுவைர் —> ஸயீத் பின் அலாகா —> அலீ (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-702 , திர்மிதீ-969 ,

…அஹ்மத்-754 , 955 , 1166 , ஹாகிம்-1264 , 1293 , 1294 ,..

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.