தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

الاعتبار , المتابعة , الشاهد

அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித்.

ஹதீஸ்கலை நூல்களில் இஃதிபார், முதாபஅத் (முதாபஅஹ்), முதாபிஃ, முதாபஃ, தாபஅ ஃபுலான், ஷாஹித், ஷவாஹித் போன்ற வழக்குச் சொல்கள் கூறப்படுவதைக் காணலாம்.

1 . الاعتبار – அல்அல்இஃதிபார்.

இஃதிபார் என்பதற்கு அரபு அகராதியில் கவனித்தல், கவனமாக செய்தல், ஒன்று சேர்த்தல், ஆய்வு செய்தல் போன்ற பல பொருள்கள் கூறப்படுகிறது.

ஹதீஸ்கலை வழக்கில் ஒரு ஹதீஸ் வேறு வழிகளில் வந்துள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்வதற்கு கூறப்படும்.

தனக்கு கிடைத்த ஒரு ஹதீஸ் சரியாக இருந்தாலும் அல்லது பலவீனமாக இருந்தாலும் அந்தக் கருத்தில் வேறு ஹதீஸ்கள் உள்ளனவா? என்று தேடி அனைத்து செய்திகளையும் முன் வைத்து அதன் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து அந்த ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் வழக்கம் ஆரம்பக் கால அறிஞர்களிடம் இருந்துள்ளது.

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், நான் ஹதீஸ்களை மூன்று வகையாக பிரித்து எழுதிக்கொள்வேன்.

1 . சரியான ஹதீஸ்கள்.

2 . ஆய்வு செய்வதற்கான ஹதீஸ்கள்.

3 .  பலவீனமான ஹதீஸ்கள் (இதன் மூலம் இவை பலவீனமானவை என்று தெரிந்து வைத்துக்கொள்வேன்) என்று கூறியுள்ளார்.

2 . இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், ஒரு கருத்தில் வரும் செய்திகளை ஒன்றுத் திரட்டிப் பார்க்காமல் அதில் உள்ள குறை (நிறை)களை கண்டுபிடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இப்னு லஹீஆவின் ஹதீஸ்கள் ஆதாரத்திற்கேற்றவை அல்ல. என்றாலும் ஆய்வு செய்வதற்காக அவற்றை நான் எழுதிக்கொள்வேன். ஏனெனில் சில ஹதீஸ்கள் இவரின் ஹதீஸ்களை பலப்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார்.

4 . ஒரு செய்தி பலவழிகளில் வரும் போது அதைப் பற்றி உறுதி நமக்கு கிடைக்கும் என்று இப்னு தைமிய்யா கூறியுள்ளார்.

5 . ஒரு செய்தி பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் வரும்போது அவை அந்த ஹதீஸின் கருத்தை பலப்படுத்துகின்றன என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறியுள்ளார்.

(இவ்வாறு மேற்கண்ட கருத்தை பல அறிஞர்கள் கூறியுள்ளனர்)


2 . المتابعة – அல்முதாபஅத் (அல்முதாபஅஹ்)

تابع தாபஅ என்பதற்கு அரபு அகராதியில் மற்றவரின் பின்னால் செல்லுதல், துணையாக இருத்தல் போன்ற பல பொருள்கள் கூறப்படுகிறது.

ஹதீஸ்கலை வழக்கில் ஒருவர், ஒரு ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் செய்திபோன்று மற்றவரும் அதே வார்த்தையில், அல்லது அந்தக் கருத்தில், அதே நபித்தோழர் வழியாக அறிவிப்பதற்கு முதாபஅத் என்று கூறப்படும்.

281 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ «سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ عَلَى الحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ المَاءَ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ» تَابَعَهُ أَبُو عَوَانَةَ، وَابْنُ فُضَيْلٍ فِي السَّتْرِ

புகாரி-281 இல் இடம்பெறும் செய்தியின் இறுதியில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இந்தச் செய்தியில் இடம்பெறும் “நான் திரையிட்டேன்” என்றக் கருத்தை அஃமஷ் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்றே அபூஅவானா, இப்னு ஃபுளைல் ஆகியோரும் அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், அஃமஷ் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> குரைப் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> மைமூனா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துள்ளார். இவரைப் போன்றே அஃமஷ் அவர்களிடமிருந்து அபூஅவானா, இப்னு ஃபுளைல் ஆகியோரும் அறிவித்துள்ளனர் என்பதால் இந்தச் செய்தியில் அபூஅவானா, இப்னு ஃபுளைல் ஆகியோர் ஸுஃப்யான் ஸவ்ரிக்கு தோது பட்டுள்ளனர் என்று குறிப்பிடுவதையே ஹதீஸ்கலை வழக்கில் முதாபஅத் என்று கூறப்படுகிறது.

  • ஒரு ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் பலரில் ஒரு சிலர் பலவீனமானவர்களாக இருக்கலாம். பலவீனமானவர்களின் அறிவிப்பை மட்டும் நாம் பார்த்துவிட்டு அந்த செய்தியை பலவீனமானது என்று நாம் முடிவு செய்துவிடக் கூடாது. பலவீனமானவரின் ஆசிரியரிடமிருந்து வேறு பலமான அறிவிப்பாளர் அறிவித்துள்ளாரா? என்று பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைப் பற்றி ஹதீஸ்கலையில் கூறப்படுகிறது.
  • மேலும் இதன் மூலம் இந்தச் செய்தி ஃகரீப் எனும் தரத்தில் உள்ளதா? அல்லது மஷ்ஹூர் எனும் தரத்தில் உள்ளதா? அல்லது முதவாதிர் எனும் தரத்தில் உள்ளதா? என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.
  • ஆரம்பக் கால அறிஞர்கள், சில அறிவிப்பாளர்களின் தரங்களை அவர்களின் அறிவிப்புகளை மற்றவர்களின் அறிவிப்புடன் ஒப்பிட்டு பார்த்தும் கூறியுள்ளனர்.
  • மேலும் இதன் மூலம் எந்த வகையான பலவீனமான செய்திகள் மற்ற செய்திகளால் சரியாகிவிடும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.

முதாபஅத் இருவகையாக உள்ளது.

1 . المتابعة التامة – அல்முதாபதுத் தாம்மஹ் – முழுமையான முதாபஅத்.

மேற்கண்ட செய்தியில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் ஆசிரியர் அஃமஷ் ஆவார். அஃமஷ் அவர்களிடமிருந்தே அபூஅவானா, இப்னு ஃபுளைல் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதில் முழுமையாக அவர்கள் தோதுபட்டிருப்பதால் இது முழுமையான முதாபஅத் ஆகும்.

2 . المتابعة القاصرة – அல்முதாபதுல் காஸிரஹ் – குறைந்த அளவு முதாபஅத்.

மேற்கண்ட செய்தியை வேறு சிலர் அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்காமல் ஸாலிம் பின் அபுல்ஜஃத் அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நாம் இவர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களுக்கு தோதுவாக அறிவித்துள்ளனர். ஆனால் இது, குறைந்த அளவு முதாபஅத் என்று கூறுவோம். இவ்வாறே அடுத்தடுத்து உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவித்துள்ளனரா? என்று பார்க்கும் போது மற்றவர்கள் அறிவித்தால் அதற்கு அல்முதாபதுல் காஸிரஹ் – குறைந்த அளவு முதாபஅத் என்று நாம் கூறுவோம்.


3 . الشاهد – அஷ்ஷாஹித் – சாட்சி

الشاهد – ஷாஹித் என்பது ஒருமை வார்த்தையாகும். شواهد – ஷவாஹித் என்பது பன்மை வார்த்தையாகும்.

ஷாஹித் என்பதற்கு அரபு அகராதியில் பல பொருள்கள் உள்ளது. அவற்றில் சாட்சி கூறுபவர் என்ற பொருளும் உள்ளது.

ஹதீஸ்கலை வழக்கில் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸை அதே வார்த்தையிலோ அல்லது கருத்திலோ வேறு ஒருவர் வேறு நபித்தோழரின் வழியாக அறிவிக்கும் செய்திக்கு ஷாஹித் என்று கூறப்படும்.

مسند الشافعي (ص: 103)

أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ، فَلَا تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

நூல்: முஸ்னதுஷ் ஷாஃபிஈ-1/130, அறிவிப்பவர்: இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷாஃபிஈ அவர்கள் மேற்கண்ட செய்தியில் فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ – “உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்” என்ற வாசகத்தை அறிவித்துள்ளார். வேறு சிலர் فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ – “உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகத்தில் அறிவித்துள்ளனர். எனவே இந்தச் செய்தியை ஷாஃபிஈ இமாம் தனித்து அறிவித்துள்ளார் என்று சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் இது தவறாகும். இஃதிபார் அதாவது ஆய்வு செய்து பார்க்கும் போது இந்தக் கருத்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.

நூல்: புகாரி-1909, அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

1 . எனவே இந்தச் செய்தி, ஷாஃபிஈ இமாம் அறிவிக்கும் செய்திக்கு ஷாஹித் ஆகும்.

2 . மேலும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்களிடமிருந்து ஷாஃபிஈ இமாம் அறிவித்ததைப் போன்றே கஃனீ அவர்களும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
—> அப்துல்லாஹ் பின் தீனார் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துள்ளார். இந்தச் செய்தி ஷாஃபிஈ இமாம் அறிவிக்கும் செய்திக்கு அல்முதாபதுத் தாம்மஹ் என்ற வகையில் தாபிஃ ஆகும்.

3 . மேலும் இந்தச் செய்தியின் கருத்தில் ஆஸிம் —> முஹம்மது பின் ஸைத் —>  இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது. இந்தச் செய்தி ஷாஃபிஈ இமாம் அறிவிக்கும் செய்திக்கு அல்முதாபதுல் காஸிரஹ் என்ற வகையில் தாபிஃ ஆகும்.

  • இதிலிருந்து ஒரு ஹதீஸின் கருத்து ஒரே நபித்தோழர் வழியாக வந்தால் அதற்கு தாபிஃ என்று கூறுவர். வேறு நபித்தோழர் வழியாக வந்தால் அதற்கு ஷாஹித் என்று கூறுவர் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
  • முதாபஅத் உள்ள இரண்டு செய்தியில் ஒரு செய்திக்கு தாபிஃ என்றும் மற்றொரு செய்திக்கு முதாபஃ என்றும் கூறுவர்.
  • வெவ்வேறு நபித்தோழர் வழியாக வரும் இரண்டு செய்தியில் முதல் செய்திக்கு, இரண்டாவது செய்தி ஷாஹித் என்றும் கூறுவர். இவ்வாறே இரண்டாவது செய்திக்கு, முதல் செய்தி ஷாஹித் என்றும் கூறுவர்.

சிலர் வார்த்தையில் ஒன்றுப்பட்டு வரும் ஹதீஸ்களுக்கு முதாபஅத் என்றும், கருத்தில் ஒன்றுப்பட்டு வரும் ஹதீஸ்களுக்கு ஷாஹித் என்றும் கூறுவர். இவர்கள் ஒரே நபித்தோழர் வழியாக வரும் செய்தியா? அல்லது வேறு நபித்தோழர் வழியாக வரும் செய்தியா? என்று பிரித்துப் பார்ப்பது இல்லை. ஆனால் இந்த வரைவிலக்கணத்தை விட, முதல் வகை வரைவிலக்கணமே சரியானது.


  • ஷாஹித், முதாபஅத் செய்திகளை அறிந்துக் கொள்வதின் மூலம் சிலவகை பலவீனமான செய்திகளை அறிஞர்கள் சரிகாண்பர்.

1 . ஹஸன் லிதாதிஹீ என்ற தரத்தில் உள்ள செய்திக்கு, இதே தரத்தில் உள்ள அல்லது இதைவிட உயர்ந்த தரத்தில் உள்ள முதாபஅத் செய்தியோ அல்லது ஷாஹித் செய்தியோ கிடைத்தால் அந்த செய்தியை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று கூறுவர்.

இதில் சரியான ஹதீஸைக் கொண்டு அல்லது ஹஸன் தர செய்தியைக்  கொண்டு மற்றொரு ஹஸன் தர செய்தியை பலப்படுத்துகின்றனர்.

2 . குறைந்த அளவு பலவீனமான செய்திக்கு இதே தரத்தில் உள்ள முதாபஅத் செய்தி கிடைத்தால் அல்லது ஷாஹித் செய்தியோ கிடைத்தால் அந்த செய்தியை ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறுவர்.

இவ்வாறே குறைந்த அளவு பலவீனமான செய்திக்கு இதைவிட உயர்ந்த தரத்தில் உள்ள செய்தி கிடைத்தால் அந்த செய்தியை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று கூறுவர்.

இதில் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸைக் கொண்டு அல்லது சரியான ஹதீஸைக் கொண்டு பலவீனமான ஹதீஸை பலப்படுத்துகின்றனர்.

3 . சில நேரம் ஷாஹித், முதாபஅத் மூலம் ஒரு ஹதீஸின் சில பகுதிகள் மட்டுமே சரியானது என்ற முடிவோ அல்லது சில வார்த்தைகள் மட்டுமே சரியானது என்ற முடிவோ கிடைக்கும்.

  • முதாபஅத் செய்தி, அறிவிப்பாளர்தொடரையும், ஹதீஸின் கருத்தையும் பலப்படுத்தும். ஷாஹித் செய்தி ஹதீஸின் கருத்தை பலப்படுத்தும்.

  • சரியான ஹதீஸின் தரத்தை அடையாத செய்தியை ஷாஹித், முதாபஅத் மூலம் பலப்படுத்துவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

1 . ஷாஹித், முதாபஅத் செய்தி முஃளலாக இருக்க கூடாது. அதாவது அறிவிப்பாளர்தொடரில் இரண்டு, இரண்டிற்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருக்கக் கூடாது.

2 . அறவே அறியப்படாதவர்கள் இடம்பெற்றிருக்கக் கூடாது…

3 . பொய்யரோ, பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவரோ இருக்கக் கூடாது.

4 . அதிகம் தவறிழைப்பவர்கள் என்பதால் முன்கர்-நிராகரிக்கப்பட்டவர் என்றோ அல்லது மத்ரூக்-கைவிடப்பட்டவர் என்றோ விமர்சிக்கப்பட்டவர் இருக்கக் கூடாது.

5 . பாவிகளாக இருக்கக் கூடாது.

6 . ஷாத்தாக இருக்கக் கூடாது.

7 . ஹதீஸைப் பாதிக்கும் இல்லத் அதாவது வேறு நுணுக்கமான குறை இருக்கக் கூடாது.

மேற்கண்ட இந்தக் கருத்தின் அடிப்படையில்தான், ஒரு செய்தி பலவீனமாக இருந்து அது பலவழிகளில் வந்தால் சரியாகிவிடும் என்ற சட்டம் பொதுவானதல்ல; அதற்கு இந்த நிபந்தனைகள் உள்ளன என்று இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(ஆதார நூல்கள்: முகத்திமது இப்னிஸ் ஸலாஹ், அன்னுகது அலா கிதாபி இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ்-தஹ்ஹான், நுஸ்ஹதுன் நள்ர், மாத்தது முஸ்தலஹ்)


الاعتبار : هو اختبار الراوي أو المروي لمعرفة منزلتهما في منازل القبول والرد .
وله صور عديدة ، وليس صورة واحدة كما يتوهم البعض .
فمن صوره : البحث عن المتابعات والشواهد لرفع النكارة أو الضعف .
ومن صوره : البحث في المتابعات لمعرفة المخالفة هل هي راجحة أو مرجوحة .
ومن صوره : اختبار حديث الراوي للحكم عليه بالضبط أو بعدمه أو بعدم العدالة .
ومن صوره : معرفة مخارج الأحاديث الباطلة ، لتفحص مدى انتقالها إلى أحاديث الرواة وهما أو عمدا بالتدليس أو الكذب

இஃதிபார் என்பதின் முழு விளக்கம்:

ஒரு செய்தியின் அறிவிப்பாளர்களையும், அந்தச் செய்தியையும் ஆய்வு செய்வதே இஃதிபார் ஆகும்.

ஆய்வு செய்யும் வகைகள்:

1 . ஒரு செய்திக்கு முதாபஅத், ஷாஹித் செய்திகள் உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும். (இவை சரியாக இருந்தால் இதன் மூலம் இந்தச் செய்தியில் உள்ள பலவீனம், நகாரத்-மறுக்கும் நிலை நீங்கும்)

2 . முதாபஅத் செய்திகள் மூலம் இந்தச் செய்தி மற்ற செய்திகளுக்கு முரணாக உள்ளதா? இல்லையா? என்று பார்க்க வேண்டும்.

3 . இந்தச் செய்தியில் உள்ள அறிவிப்பாளரின் நினைவாற்றலை சரியானதா? இல்லையா? என்று பார்க்க வேண்டும்.

4 . அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை சரியாக அறிவித்துள்ளார்களா? அல்லது தவறாக அறிவித்துள்ளார்களா?; இதில் தத்லீஸ் உள்ளதா? இல்லையா?; இது பொய்யர்கள் வழியாக வந்துள்ளதா? இல்லையா? என்று பலவகைத் தகவல்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

(தகவல்: ஹாதிம் பின் ஆரிஃப் அல்அவ்னீ)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.