தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

அறிவிப்பாளர்தொடர்களில் முக்கியமான அடிப்படையானவர்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

மதாருல் இஸ்னாத்-அறிவிப்பாளர்தொடர்களில் இடம்பெறும் முக்கியமான (அஸல்-அடிப்படையான) அறிவிப்பாளர்கள்-(மதாருர் ருவாத்).

(அதாவது இவர்கள் வழியாகத் தான் பெரும்பான்மையான ஹதீஸ்கள் வந்திருக்கும். இவர்களிடமிருந்து தான் அதிகமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பார்கள்.)

குறிப்பிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தவர்கள்:

1 . மதீனாவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்:

  • 1 . இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ.

(பிறப்பு ஹிஜ்ரீ 50 முதல் 58 க்குள், இறப்பு ஹிஜ்ரீ 123 / 124)

2 . மக்காவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்:

  • 2 . அம்ர் பின் தீனார்.

(பிறப்பு ஹிஜ்ரீ 46 (அ) 56, இறப்பு ஹிஜ்ரீ 116, 125-129)

3 . பஸராவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்:

  • 3 . கதாதா, 4 . யஹ்யா பின் அபூகஸீர்.

4 . கூஃபாவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்:

  • 5 . அபூஇஸ்ஹாக்-அம்ர் பின் அப்துல்லாஹ், 6 . அல்அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்.

இந்த 6 பேரின் கல்வியை நூலில் தொகுத்தவர்கள்; மனனமிட்டவர்கள்.

1 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மதீனா

(இவர் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 50/58
இறப்பு ஹிஜ்ரி 123/124
அவர்களிடம் ஹதீஸைக் கேட்டார்)

2 . முஹம்மது பின் இஸ்ஹாக்-மதீனா

(இவர் இப்னுஷிஹாப் ஸுஹ்ரீ, அல்அஃமஷ் ஆகியோரிடம் ஹதீஸைக் கேட்டார்)

மதீனா, கூஃபாவாசிகளின் ஹதீஸ்களைத் தெரிந்தவர்.

3 . இப்னு ஜுரைஜ்-மக்கா

4 . இப்னு உயைனா-மக்கா

(இவர் இப்னுஷிஹாப் ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார்,பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அபூஇஸ்ஹாக், அல்அஃமஷ் ஆகியோரிடம் ஹதீஸைக் கேட்டார்)

மக்கா, மதீனா, கூஃபாவாசிகளின் ஹதீஸ்களைத் தெரிந்தவர்.

5 . ஸயீத் பின் அபூஅரூபா-பஸரா

6 . ஹம்மாத் பின் ஸலமா-பஸரா

(6/2. ஹம்மாத் பின் ஸைத்-பஸரா-இடையில் பார்வையற்றவராக ஆகிவிட்டார்)

7 . அபூஅவானா-பஸரா

8 . ஷுஅபா-பஸரா

9 . மஃமர்-பஸரா

(இவர் இப்னுஷிஹாப் ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார்,பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
கதாதா, யஹ்யா பின் அபூகஸீர், அபூஇஸ்ஹாக் ஆகியோரிடம் ஹதீஸைக் கேட்டார்)

மக்கா, மதீனா, கூஃபா, பஸராவாசிகளின் ஹதீஸ்களைத் தெரிந்தவர்.

10 . ஸுஃப்யான் ஸவ்ரீ-கூஃபா

11 . அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ-ஷாம்

12 . ஹுஷைம் பின் பஷீர்-வாஸித்


மேற்கூறப்பட்டோரின் கல்வியை பெற்றவர்கள்.

1 . யஹ்யா பின் ஸயீத்

2 . யஹ்யா பின் ஸகரிய்யா

3 . வகீஃ பின் அல்ஜர்ராஹ்

4 . இப்னுல் முபாரக்

5 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

6 . யஹ்யா பின் ஆதம்.

இந்தத் தகவலை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் தனது இலலில் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலல் லிஇப்னில் மதீனீ-1)


நான்கு பேர் அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டிருந்தனர்.

1 . ஸுஹ்ரீ.

  • இவர் அறிவிப்பாளர்தொடர்களை நன்கு அறிந்தவர்.

2 . கதாதா

  • இவர் கருத்துவேறுபாடுள்ள சட்டங்களை நன்கு அறிந்தவர்.

3 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

  • இவர் அலீ (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவர்.

4 . அஃமஷ்

  • இவர் மேற்கூறப்பட்ட அனைத்தையும் நன்கு அறிந்தவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அவர்கள் கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்தா கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜாமிஉ லிஅக்லாகிர் ராவீ-1895)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .


1 – نَظَرْتُ فَإِذَا الْإِسْنَادُ يَدُورُ عَلَى سِتَّةٍ

فَلِأَهْلِ الْمَدِينَةِ

1 – ابْنُ شِهَابٍ وَهُوَ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عبد اللَّهِ بْنِ شِهَابٍ وَيُكَنَّى أَبَا بَكْرٍ مَاتَ سَنَةَ أَرْبَعٍ وَعِشْرِينَ وَمِائَةٍ

وَلِأَهْلِ مَكَّةَ

2 – عَمْرُو بْنُ دِينَارٍ مَوْلَى جُمَحٍ وَيُكَنَّى أَبَا مُحَمَّدٍ مَاتَ سَنَةَ سِتٍّ وَعِشْرِينَ وَمِائَة

وَلِأَهْلِ الْبَصْرَةِ

3 – قَتَادَةُ بْنُ دِعَامَةَ السَّدُوسِيُّ وَكُنْيَتُهُ أَبُو الْخَطَّابِ مَاتَ سنة سبع عشرَة وَمِائَةٍ
4 – وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَيُكَنَّى أَبَا نَصْرٍ مَاتَ سَنَةَ اثْنَتَيْنِ وَثَلَاثِينَ وَمِائَةٍ بِالْيَمَامَةِ

وَلِأَهْلِ الْكُوفَةِ

5 – أَبُو إِسْحَاقَ وَاسْمُهُ عَمْرُو بن عبد الله بن عبيد وَمَاتَ سَنَةَ تِسْعٍ وَعِشْرِينَ وَمِائَةٍ
6 – وَسُلَيْمَانُ بْنُ مِهْرَانَ مَوْلَى بَنِي كَاهِلٍ مِنْ بَنِي أَسَدٍ وَيُكَنَّى أَبَا مَحْمَدٍ مَاتَ سَنَةَ ثَمَانٍ وَأَرْبَعِينَ وَمِائَةٍ كَانَ جَمِيلًا

2 – ثُمَّ صَار علم هَؤُلَاءِ السِّت إِلَى أَصْحَابِ الْأَصْنَافِ مِمَّنْ صَنَّفَ

فَلِأَهْلِ الْمَدِينَةِ

1 – مَالِكُ بْنُ أَنَسِ بْنِ أَبِي عَامِرٍ الْأَصْبَحِيُّ عِدَادُهُ فِي بَنِي تَيْمِ اللَّهِ وَمَاتَ سَنَةَ تِسْعٍ وَسَبْعِينَ وَمِائَةٍ وَسَمِعَ مِنِ ابْنِ شِهَابٍ
2 – وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ يَسَارٍ مَوْلَى بَنِي مَخْرَمَةَ وَيُكَنَّى أَبَا بَكْرٍ مَاتَ سَنَةَ اثْنَتَيْنِ وَخَمْسِينَ وَسَمِعَ مِنِ ابْنِ شِهَابٍ وَالْأَعْمَشَ

وَمِنْ أَهْلِ مَكَّةَ

3 – عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيز بن جيرج مَوْلًى لِقُرَيْشٍ وَيُكَنَّى أَبَا الْوَلِيدِ مَاتَ سَنَةَ إِحْدَى وَخَمْسِينَ وَمِائَةٍ

4 – وَسُفْيَانَ بْنُ عُيَيْنَةَ بْنِ مَيْمُونَ مَوْلَى مُحَمَّدِ بْنِ مُزَاحِمٍ أَخُو الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ الْهِلَالِيِّ وَيُكَنَّى أَبَا مَحْمَدٍ مَاتَ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَمِائَةٍ

سُفْيَانُ لَقِيَ ابْنَ شِهَابٍ وَعَمْرَو بْنَ دِينَارٍ وَأَبَا إِسْحَاقَ وَالْأَعْمَشَ

وَمِنْ أَهْلِ الْبَصْرَةَ

5 – سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مَوْلَى بَنِي عَدِيِّ بْنِ يَشْكُرَ وَهُوَ سَعِيدُ بْنُ مِهْرَانَ وَيُكَنَّى أَبَا النَّضْرِ مَاتَ سَنَةَ ثَمَانٍ أَوْ تسع وَخمسين وَمِائَة
6 – وَحَمَّاد بْنُ سَلَمَةَ قَالَ أَحْسَبُهُ مَوْلًى لبني سُلَيْمَان وَيُكَنَّى أَبَا سَلَمَةَ مَاتَ سَنَةَ ثَمَان وَسِتِّينَ وَمِائَة
7 – وَأَبُو عَوَانَةَ وَاسْمُهُ الْوَضَّاحُ مَوْلَى يَزِيدَ بْنِ عَطَاءٍ الْوَاسِطِيِّ مَاتَ سَنَةَ خمس وَسبعين وَمِائَة
8 – وَشعْبَة بْنُ الْحَجَّاجِ أَبُو بِسْطَامٍ مَوْلَى الأشافر مَاتَ سنة سِتِّينَ وَمِائَة

9 – وَمعمر بْنُ رَاشِدٍ وَيُكَنَّى أَبَا عُرْوَةَ مولى الْحدانِي وَمَاتَ بِالْيَمَنِ سَنَةَ أَرْبَعٍ وَخَمْسِينَ وَمِائَةٍ
سَمِعَ مِنِ ابْنِ شِهَابٍ وَعَمْرِو بْنِ دِينَارٍ وَقَتَادَةَ وَمِنْ يَحْيى بْنِ أَبِي كَثِيرٍ وَمِنْ أَبِي إِسْحَاقَ

وَمِنْ أَهْلِ الْكُوفَةِ

10 – سُفْيَانُ بْنُ سَعِيدٍ الثَّوْرِيُّ وَيُكَنَّى أَبَا عَبْدِ اللَّه وَمَاتَ سَنَةَ إِحْدَى وَسِتِّينَ وَمِائَة

وَمِنْ أَهْلِ الشَّامِ

11 – عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْأَوْزَاعِيُّ وَيُكَنَّى أَبَا عَمْرٍو مَاتَ سَنَةَ إِحْدَى وَخَمْسِينَ وَمِائَةٍ

وَمِنْ أَهْلِ وَاسِطٍ

12 – هُشَيْمُ بْنُ بَشِيرٍ مَوْلَى بَنِي سُلَيْمٍ وَيُكَنَّى أَبَا مُعَاوِيَةَ مَاتَ سَنَةَ ثَلَاثٍ وَثَمَانِينَ وَمِائَةٍ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ الْهَرَوِيُّ ثَنَا هُشَيْمُ بْنُ بَشِيرِ الْقَاسِم بن دِينَارمولى خُزَيْمَة بن خازم أَمِيرِ الْمُؤْمِنِينَ الْمُحَدِّثِينَ يُكَنَّى أَبَا مُعَاوِيَةَ

3 – ثُمَّ انْتَهَى عِلْمُ هَؤُلَاءِ الثَّلَاثَةِ مِنْ أَهْلِ الْبَصْرَةِ وَعِلْمُ الِاثْنَيْ عَشَرٍ إِلَى سِتَّةٍ إِلَى

1 – يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ وَيُكَنَّى أَبَا سَعِيدٍ وَهُوَ مَوْلًى لِبَنِي تَيْمٍ وَمَاتَ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَمِائَةٍ فِي صَفَرٍ
2 – وَيَحْيَى بْنِ زَكَرِيَّا بن أبي زَائِدَة ويكنى أَبَا سَعِيدٍ مَوْلًى لِهَمَدَانَ مَاتَ سنة اثْنَتَيْنِ وثَمَانِيَة وَمِائَةٍ
3 – وَوَكِيعِ بْنِ الْجَرَّاحِ بْنِ مُلَيْحِ بْنِ عَدِيِّ بْنِ فَرَسٍ وَيُكَنَّى أَبَا سُفْيَانَ مَاتَ سَنَةَ تسع وَتِسْعين وَمِائَة
4 – إِلَى عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَهُوَ حَنْظَلِيٌّ وَيُكَنَّى أَبَا عَبْدِ الرَّحْمَنِ وَمَات سنة إِحْدَى وَثَمَانِينَ وَمِائَة بِهِيتَ
5 – وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ الْأَسَدِيِّ وَيُكَنَّى أَبَا سَعِيدٍ مَاتَ سَنَةَ ثَمَانٍ وَتِسْعِينَ وَمِائَةٍ
6 – وَيَحْيَى بْنِ آدَمَ وَيُكَنَّى أَبَا زَكَرِيَّا وَهُوَ مَوْلَى خَالِدِ بْنِ عَبْدِ الله ابْن أُسَيْدٍ بِالظَّنِّ مِنِّي مَاتَ سَنَةَ ثَلَاث ومِائَتَيْنِ


«الجامع لأخلاق الراوي وآداب السامع للخطيب البغدادي» (2/ 293):
«1895 – أنا أَبُو بَكْرٍ الْبَرْقَانِيُّ، قَالَ: قُرِئَ عَلَى الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ التَّمِيمِيِّ وَأَنَا أَسْمَعُ وَقَرَأْتُهُ عَلَى أَبِي حَامِدٍ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الصَّائِغِ: أَخْبَرَكُمْ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: سَمِعْتُ أَحْمَدَ بْنَ عَبْدَةَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا دَاوُدَ الطَّيَالِسِيَّ، يَقُولُ: ” وَجَدْنَا الْحَدِيثَ عِنْدَ أَرْبَعَةٍ: الزُّهْرِيِّ وَقَتَادَةَ وَالْأَعْمَشِ وَأَبِي إِسْحَاقَ قَالَ: وَكَانَ قَتَادَةُ أَعْلَمَهُمْ بِالِاخْتِلَافِ وَكَانَ الزُّهْرِيُّ أَعْلَمَهُمْ بِالْإِسْنَادِ وَكَانَ أَبُو إِسْحَاقَ أَعْلَمَهُمْ بِحَدِيثِ عَلِيًّ وَعَبْدِ اللَّهِ وَكَانَ عِنْدَ الْأَعْمَشِ مِنْ كُلِّ هَذَا وَلَمْ يَكُنْ عِنْدَ وَاحِدٍ مِنْ هَؤُلَاءِ إِلَّا أَلْفَيْنِ أَلْفَيْنِ “»


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.