தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்?

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்?

ஹதீஸ்கலை நூல்களில் ஸியாததுஸ் ஸிகதி மக்பூலதுன்- زيادة الثقة مقبولة – பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி கூறப்படுவதைக் காணலாம்.

இதைப் பற்றிய விவரம் (சுருக்கம்):

1 . ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை பொதுவாக எல்லா நிலையிலும் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

2 . சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை பொதுவாக எப்போதும் ஏற்கக்கூடாது என்று கூறுகின்றனர்.

3 . ஹதீஸ்கலை அறிஞர்களில் வேறுசிலர், சில நிபந்தனைகள், ஆதாரங்களின் அடிப்படையில் தான் பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


இதைப் பற்றி விரிவான விளக்கம்:

முன்னுரை:

ஒரு கருத்தை தரும் ஹதீஸ்கள் குறிப்பிட்ட ஒரு அறிவிப்பாளர்தொடர் வழியாக மட்டும் வந்துள்ளன. சில ஹதீஸ்கள் இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன.

பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வரும் அறிவிப்பாளர்களில் பலர் கூறும் தகவலை விட, ஒருவரோ அல்லது வேறு சிலரே கூடுதலான தகவலை அறிவித்திருப்பார்கள். கூடுதலாக அறிவிப்பவர் பலவீனமானவர் என்றால் அதை ஏற்கத் தேவையில்லை.

ஆனால் பலமானவர் என்றால் என்ன செய்வது? இதற்கு தான் ஸியாததுஸ் ஸிகதி மக்பூலதுன்- زيادة الثقة مقبولة – பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி ஹதீஸ்கலையில் உள்ளது.


கூடுதலான தகவல் இரு வகையாக உள்ளது.

1 . அறிவிப்பாளர்தொடரில் கூடுதலாக அறிவிப்பது.

2 . ஹதீஸின் கருத்தில் கூடுதலான தகவலை அறிவிப்பது.


கூடுதலான தகவலை அறிவிப்பதற்கு என்ன காரணம்?

 

அறிவிப்பாளர்தொடரில் கூடுதலாக அறிவிப்பது.

முத்தஸில், முர்ஸல்; மர்ஃபூஃ, மவ்கூஃப், அல்மஸீத் ஃபீ இத்திஸாலிஸ் ஸனத்.

1 . ஒரு ஹதீஸை, சிலர் முத்தஸிலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் எந்தஇடைமுறிவும் ஏற்படாமல் அறிவிப்பார்கள்; சிலர் முர்ஸலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டவாறு அறிவிப்பார்கள்.

2 . ஒரு ஹதீஸை, சிலர் மர்ஃபூவாக அதாவது நபியின் சொல்லாக அறிவிப்பார்கள்; சிலர் மவ்கூஃபாக அதாவது நபித்தோழரின் கூற்றாக அறிவிப்பார்கள்.

3 . ஒரு ஹதீஸை, சிலர் ஒரு அறிவிப்பாளர்தொடரில் அறிவிப்பார்கள். வேறு சிலர் அந்த அறிவிப்பாளர்தொடரின் இடையில் ஒன்றிரண்டு அறிவிப்பாளர்களை கூடுதலாக கூறியிருப்பார்கள். (இதற்கு அல்மஸீத் ஃபீ இத்திஸாலிஸ் ஸனத் என்று கூறப்படும்)

  • முத்தஸிலாக அறிவிப்பவர்; முர்ஸலாக அறிவிப்பவர் இந்த இருவரில் முத்தஸிலாக அறிவிப்பவர் கூடுதல் தகவலை அறிவித்துள்ளார் என்று கூறப்படும்.
  • மர்ஃபூவாக அறிவிப்பவர்; மவ்கூஃபாக அறிவிப்பவர் இந்த இருவரில் மர்ஃபூவாக அறிவிப்பவர் கூடுதல் தகவலை அறிவித்துள்ளார் என்று கூறப்படும்.
  • குறைந்த அறிவிப்பாளர்களை கூறியவர்; அதிக அறிவிப்பாளர்களை கூறியவர் – இந்த இருவரில் அதிக அறிவிப்பாளர்களை கூறியவர் கூடுதல் தகவலை அறிவித்துள்ளார் என்று கூறப்படும்.

பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்கும் விசயத்தில் அறிஞர்களிடம் உள்ள கருத்துவேறுபாடுகள்:

1 . முத்தஸிலாக அறிவிப்பவர்; முர்ஸலாக அறிவிப்பவர் இந்த இருவரில் (முத்தஸிலாக அறிவிப்பவர் கூடுதல் தகவலை அறிவித்துள்ளார் என்பதை அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதுடன்) முர்ஸலாக அறிவிப்பவரின் செய்திக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் என இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் கூறியுள்ளார்.

2 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், 5 வகையான தன்மைகளை கொண்ட ஒரு அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கும் தகவல் ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஐந்து வகையான தன்மைகள்:

1 . நம்பகமானவராக இருப்பது.

2 . உண்மையாளராக இருப்பது.

3 . தன்னுடைய ஹதீஸ்களை சரியாக தெரிந்தவராக இருப்பது.

4 . ஹதீஸின் கருத்தை புரிந்தவராக இருப்பது.

5 . தத்லீஸ் செய்யாதவராக இருப்பது.

எனவே ஒரு செய்தியை இந்த பண்புள்ள; பலமான ஒருவர் முர்ஸலாக அறிவிக்கிறார். இதே செய்தியை இந்த பண்புள்ள; வேறொரு பலமானவர் முத்தஸிலாக அறிவிக்கிறார் என்றால் முத்தஸிலாக அறிவிப்பவரின் செய்தியை நாம் ஏற்றுக் கொள்வோம்; இவ்வாறே முர்ஸலாக அறிவிப்பவரின் செய்தியையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் கூறியுள்ளார்.

(முகத்திமது ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.)


3 . பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும்.

(குறைந்த தகவலை அறிவித்தவர்கள், இவர்களின் எண்ணிக்கையில் இருந்தாலும், அல்லது இவர்களை விட அதிகமாக இருந்தாலும், அல்லது இவர்களைவிட மிகவும் நினைவாற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் ஏற்கப்படும் என்று அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்கள், ஃபுகஹாக்கள்-மார்க்க சட்டநிபுணர்கள் ஆகியோர் கூறியுள்ளனர் என்று கதீப் பஃதாதீ அவர்கள் கூறியுள்ளதை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் குறிப்பிட்டுள்ளார்.


4 . முத்தஸிலாக அறிவிப்பவர், முர்ஸலாக அறிவிப்பவர் – இந்த இருவரில் முத்தஸிலாக அறிவிப்பவரின் செய்திக்கு முன்னுரிமை அளித்து அதை ஏற்கப்படும்.

மர்ஃபூவாக அறிவிப்பவர், மவ்கூஃபாக அறிவிப்பவர் – இந்த இருவரில் மவ்கூஃபாக அறிவிப்பவரின் செய்திக்கே முன்னுரிமை அளித்து அதன்படி முடிவு செய்யப்படும்.

ஏனெனில் நபியின் சொல்லும், நபித்தோழரின் சொல்லும் முரண்பாடாகும். அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இருவரும் நபியின் சொல்லையே அறிவிக்கின்றனர். அதில் முரண்பாடு இல்லை என்று இப்னுஸ் ஸமல்கானீ அவர்கள் கூறியதாக அலாயீ அவர்கள் கூறியதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் இந்தச் சட்டம் இரு அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் தாபிஈ ஒருவராக இருந்தால் தான் சரியாகும். தாபிஈ இருவராக இருந்தால் இவ்வாறு முடிவு செய்யமுடியாது. இருவரும் ஒரே சபையில் இந்தசெய்தியை கேட்டுள்ளார்கள் என்று தெரிந்தால் மட்டுமே முடிவு செய்யமுடியும் என்று அலாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்…


5 . ஆரம்பக்கால அறிஞர்களான அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் பொதுவாக பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்பதில்லை. தகுந்த காரணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே கூடுதல் தகவலை ஏற்பார்கள் அல்லது மறுப்பார்கள் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: நுஸ்ஹதுன் நள்ர்-92 – 94)


ஹதீஸ் உதாரணங்கள்:


2 . ஹதீஸின் கருத்தில் கூடுதலான தகவலை அறிவிப்பது.

ஒரு பலமானவர் மற்றவர்கள் அறிவித்த வார்த்தைகளை விட அல்லது கருத்தைவிட கூடுதலாக அறிவிப்பது.

இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்கள் இதை 3 வகையாக குறிப்பிடுகிறார்:

1 . ஒரு பலமானவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பது. இது ஷாத் ஆகும்.

2 . மற்றவர்களுக்கு மாற்றமாகவோ அல்லது தோதுவாகவோ இல்லாமல் அறிவிப்பது.

3 . மற்றவர்களை விட ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை அதிகமாக அறிவிப்பது.


இது விசயத்தில் அறிஞர்களிடம் உள்ள கருத்துவேறுபாடுகள்:

1 . ஒரு பலமானவர் மற்றவர்களை விட ஒரு வார்த்தையை அல்லது வாக்கியத்தை அதிகமாக அறிவித்து கூடுதல் கருத்தை அறிவித்தால் அது பொதுவாக எந்த நிபந்தனையின்றி ஏற்கப்படும்.

இவை எந்தவகை ஹதீஸாக இருந்தாலும் சரி. வணக்கவழிபாடுகள் சார்ந்த ஹதீஸ்களாக இருந்தாலும், அவற்றின் சிறப்புபற்றிய ஹதீஸ்களாக இருந்தாலும், ஹலால், ஹராம் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களாக இருந்தாலும் சரி. வேறு எந்தவகையான ஹதீஸ்களாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொள்ளப்படும். இதுவே ஹதீஸ்கலை அறிஞர்கள், ஃபுகஹாக்கள்-மார்க்க சட்டநிபுணர்கள் ஆகியோரின் கருத்து என்று கதீப் பஃதாதீ அவர்கள் கூறியுள்ளார்.


2 . சிலர் வார்த்தையை கூடுதலாக அறிவித்தால் ஏற்கப்படும். கூடுதலான கருத்தை அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

ஒருவரே ஒரு தடவை குறைந்த வார்த்தைகளையும், மற்றொரு தடவை அதிக வார்த்தைகளையும் அறிவித்தால் கூடுதல் தகவலை ஏற்கக்கூடாது. இந்த நிலை இல்லாமல் வரும் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்று வேறுசிலர் வித்தியாசப்படுத்தி கூறுகின்றனர்.

3 . ஹுஃப்பாள்கள் (எனும் அதிகமான ஹதீஸ்களை மனனம் செய்தவர்கள்; நினைவாற்றல் அதிகம் உள்ளவர்கள்) அறிவிக்கும் கூடுதல் தகவலை மட்டுமே ஏற்கவேண்டும். இதல்லாத மற்றவர்கள் அறிவிக்கும் கூடுதல் தகவலை ஏற்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

எனவே ஒரு பலமானவர் கூடுதல் தகவலை அறிவிக்கும்போது அந்த செய்தியை ஹுஃப்பாள்களும் அவ்வாறு அறிவித்திருந்தால் ஏற்கலாம். அந்தச் செய்தியை அறிவிக்கும் ஹுஃப்பாள்கள் கூடுதல் வார்த்தையை அறிவிக்காவிட்டால் இவரின் கூடுதல் தகவலை ஏற்கக்கூடாது என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தின் படியே இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் நடைமுறை உள்ளது.

பலமானவர் என்பதுடன் அதிக நினைவாற்றல் உள்ளவர் என்றால் அவரின் கூடுதல் தகவலை ஏற்கலாம்; இவ்வாறு அதிக நினைவாற்றல் இல்லாதவர் என்றால் ஏற்கக்கூடாது என்பது அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் நடைமுறை என்பதை இப்னு ரஜப் குறிப்பிட்டுள்ளார்.


4 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், தான் அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி நன்கு அறிந்த-ஃபிக்ஹ் எனும் விளக்கமுள்ள அறிவிப்பாளரின் கூடுதல் தகவலை ஏற்கலாம். இவ்வாறு இல்லாதவரின் தகவலை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.


5 . திர்மிதீ அவர்கள், நல்ல நினைவாற்றல் உள்ளவரின் கூடுதல் தகவலை ஏற்கலாம். இவ்வாறு இல்லாதவரின் தகவலை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.


கதீப் பஃதாதீ அவர்கள், பொதுவாக பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்கலாம் என்பதற்கு கூறப்படும் ஆதாரங்களை இப்னு ரஜப் அவர்கள் விமர்சித்துள்ளார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் வழமை இவ்வாறு இருக்கவில்லை. அவரின் தாரீக் என்ற நூலைக் காணும் போது ஆதாரத்தின் அடிப்படையில் அவர் பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்பார் அல்லது மறுப்பார் என்று தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களும் இந்த விதியை ஏற்றுள்ளார். ஆனாலும் இந்தவிசயத்தில் அதிக நினைவாற்றல் உள்ளவர்கள் அறிவிக்கும் செய்திகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளார். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள் முர்ஸலாக அறிவித்திருந்தால் அதை முர்ஸல் என்றே குறிப்பிடுவார். அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையையும்; நினைவாற்றலையும்; ஆசிரியர், மாணவர்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தையும் அடிப்படையாக வைத்தே பலமானவரின் கூடுதல் தகவலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்.

நினைவாற்றல் அதிகம் உள்ளவர் என்பதைக் கவனித்தே அவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற கருத்தை இப்னுகுஸைமா போன்ற இன்னும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.


  • இதுவரை நாம் பார்த்த தகவல்களிலிருந்து கதீப் பஃக்தாதீ, இமாம் நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    போன்ற அறிஞர்கள் பொதுவாக கூடுதல் தகவலை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதன்படி சில அறிஞர்கள் ஹதீஸின் தரத்தை முடிவு செய்கின்றனர்.

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், ஒரு பலமானவரின் கூடுதல் தகவலை பொதுவாக ஏற்கலாம் என்றோ அல்லது ஏற்கக்கூடாது என்றோ முற்கால ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியதில்லை. தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறிவிட்டு, ஷாஃபிஈ இமாம் அவர்களின் கருத்து நினைவாற்றலை கவனிப்பது தான் என்றும் கூறிவிட்டு,

1 . கூடுதல் தகவலை அறிவிப்பவர் பலமானவராக; நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். நம்பகமானவர் என்ற தன்மை மட்டும் கொண்ட – ஸதூக் எனும் தரத்தில் அமைந்த சுமாரான நினைவாற்றல் உள்ளவராக இருக்கக்கூடாது.

2 . கூடுதல் தகவல், மற்ற பலமானவர்களின் தகவலுக்கு மாற்றமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை ஷாத் என்று முடிவு செய்யப்படும் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வேறுசில அறிஞர்கள் ஹதீஸின் தரத்தை முடிவு செய்கின்றனர்.



இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.