தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஹதீஸ்களின் தரங்களைக் குறிப்பிடும் அறிஞர்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஆரம்ப காலத்தில் ஹதீஸ்களை தொகுத்தவர்கள் பல தரப்பட்ட தலைப்புகளில் தொகுத்தார்கள்.

1 . சிலர் நபி (ஸல்) அவர்கள் கூறியவை, நபித்தோழர்கள் கூறியவை, தாபிஈன்கள் கூறியவை என அனைத்தையும் தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு முஸன்னஃப் என்று கூறப்படும்.

2 . வேறுசிலர் மக்கள் மார்க்க சட்டங்களை எளிதாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்பிட்ட தலைப்புகளில் வரிசையாக ஹதீஸ்களை பதிவு செய்து தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு முஅத்தா என்று கூறப்படும். (இதை தொகுத்து சில அறிஞர்களிடம் கொடுத்து சரிபார்த்ததால் முஅத்தா-அறிஞர்களின் ஏகோபித்த முடிவு என்று பெயர் கூறப்பட்டது.)

3 . வேறு சிலர் நபித்தோழர்களின் பெயர் வரிசையில் அவர்களின் ஹதீஸ்களை தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு முஸ்னத் என்று கூறப்படும்.

4 . வேறுசிலர் இஸ்லாம் கூறும் அனைத்து வகையான அம்சங்களையும் சில குறிப்பட்ட தலைப்புகளில் தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு ஜாமிஃ என்று கூறப்படும்.

5 . வேறு சிலர் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை குறிப்பிடும் ஹதீஸ்களை மட்டும் சில குறிப்பட்ட தலைப்புகளில் தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு ஸுனன் என்று கூறப்படும்.

6 . வேறு சிலர் குறிப்பிட்ட ஒரே தலைப்பின் கீழ் உள்ள ஹதீஸ்களை மட்டும் தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு ஜுஸ்உ என்று கூறப்படும்.

இவ்வாறே ஹதீஸ்துறை சார்ந்த, அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள், தபகாத், தாரீக், தக்ரீஜ் நூல்கள், இலல் நூல்கள், குறிப்பிட்ட ஆசிரியர்களின் ஹதீஸ்கள் பற்றிய நூல்கள், முஸ்தக்ரஜாத், முஸ்தத்ரக், அத்ராஃப், முஃஜம், ஸவாஇத், ஃபவாஇத் போன்ற இன்னும் பலதரப்பட்ட நூல்களை அறிஞர்கள் தொகுத்துள்ளனர்.

இந்த நூல்களில் சிலர் சரியான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் என அனைத்தையும் சேர்த்து தொகுத்தனர். சிலர் சரியானதை மட்டும் தொகுத்தனர். சிலர் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக பலவீனமான ஹதீஸ்கள், பொய்யான ஹதீஸ்கள் என்ற பெயரில் தனிநூலாக தொகுத்தனர்.


ஆரம்ப காலத்தில் ஹதீஸ்களைக் கூறும் போது அறிவிப்பாளர்தொடரை கூறும் வழக்கமோ அல்லது கேட்கும் வழக்கமோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் இருக்கும்போது அவர்களிடமிருந்து நேரடியாக நபித்தோழர்கள் ஹதீஸ்களை கேட்டார்கள். அவர்களை அடுத்துள்ள தலைமுறையினரான தாபிஈன்களுக்கு நபித்தோழர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிடுவார்கள்.

மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இஸ்லாமிய சமுதாயத்தில் அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட்டது. அதே போன்று போது நான்காம் கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் அரசியல் ரீதியான கருத்துவேறுபாடு ஏற்பட்டு குழப்பங்கள் ஏற்பட்டது.

இந்தக் குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவன் அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதன் ஆவான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இவன் பலவகையான சதித்திட்டங்களை தீட்டி இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினான். முதன் முதலில் நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியவன் இவன் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் தான் பல வகையான பித்அத்வாதிகளும் தோன்றினார்கள்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டதால் தான் மார்க்க அறிஞர்களிடம் ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர்தொடரை கூறும் வழக்கமும், கேட்கும் வழக்கமும் தோன்றியது.

இதைப் பற்றி இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (2/ 559):
‌‌3640 – أخبرنَا مُحَمَّد بن الصَّباح قَالَ حَدثنَا إِسْمَاعِيل عَن عَاصِم الْأَحول عَن بن سِيرِين قَالَ كَانُوا لَا يسْأَلُون عَن الْإِسْنَاد ‌فَلَمَّا ‌وَقعت ‌الْفِتْنَة قَالُوا ‌سموا لنا رجالكم فَينْظر إِلَى أهل السّنة فَيُؤْخَذ حَدِيثهمْ وَإِلَى أهل الْبدع فَلَا يُؤْخَذ حَدِيثهمْ

ஆரம்ப காலத்தில் மக்கள் அறிவிப்பாளர்தொடரைப் பற்றி (அதிகம்) விசாரிக்காதவர்களாகவே இருந்தனர். ஆனால், குழப்பம் ஏற்பட்ட போது, ‘உங்கள் அறிவிப்பாளர்களின் பெயர்களை எங்களுக்குக் கூறுங்கள்’ என்று கேட்கத் தொடங்கினார்கள். அதனடிப்படையில் நபிவழியை பின்பற்றுபவர்கள் யாரெனப் பார்க்கப்பட்டு அவர்களின் ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பித்அத்வாதிகள் யாரெனப் பார்க்கப்பட்டு அவர்களின் ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டன.

(நூல்கள்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-2/559, முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
முன்னுரை-25
)


இன்ன செய்தியை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்காமல் மற்றவர்களிடமிருந்து கேட்டபோது இதை நபி (ஸல்) அவர்கள் தான் கூறினார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பழக்கம் நபித்தோழர்களின் காலத்திலேயே வந்துவிட்டது…

இவ்வாறே, குறிப்பிட்ட ஒரு ஹதீஸின் கருத்தை அதை அறிவிப்பவரே தவறாக புரிந்துக் கொள்ளும் போது அதன் சரியான விளக்கத்தை கூறும் பழக்கம் நபித்தோழர்களின் காலத்திலேயே வந்துவிட்டது…

முதன்முதலில் நபித்தோழர்களில் சிலரும், தாபிஈன்களில் சிலரும் ஹதீஸ்களை எழுதிக் கொண்ட நிகழ்வு தனி வரலாறாகும். (இன்ஷா அல்லாஹ் இதை தனியாக கூறப்படும்)

குழப்பமான காலம் ஏற்பட்ட பிறகு முதன் முதலில் ஹதீஸில் இடம்பெறும் அறிவிப்பாளர்களை விமர்சிக்கும் பழக்கம் தாபிஈன்களின் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது.

ஷஅபீ,பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
ஹஸன் பஸரீ, தாவூஸ் பின் கைஸான், ஸயீத் பின் ஜுபைர், இப்ராஹீம் நகஈ, ஸுலைமான் அத்தைமீ, வகீஃ, ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவ்ஸாஈ, மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்ற தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள் சில அறிவிப்பாளர்களை விமர்சித்துள்ளனர். சில வகை செய்திகளை விமர்சித்துள்ளனர்.

شرح علل الترمذي (1/ 355):
قال يعقوب: وسمعت علي ‌بن ‌المديني يقول: كان ممن ينظر في الحديث ويفتش عن الإسناد، ولا نعرف أحدا أول منه، محمد بن سيرين ثم كان أيوب وابن عون، ثم كان ‌شعبة، ثم كان يحيى بن سعيد، وعبد الرحمن.
قلت لعلي: فمالك بن أنس؟ فقال: أخبرني سفيان بن عيينة، قال: ما كان أشد انتقاء مالك الرجال.

இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதாக யஃகூப் அவர்கள் குறிப்பிடுகிறார்:

ஹதீஸ்களை ஆராய்ந்து, அதன் அறிவிப்பாளர்தொடரை துருவித் துருவி ஆய்வு செய்தவர்களில் முதன்மையானவராக முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்களையே நாங்கள் கருதுகிறோம். அவருக்குப் பிறகு அய்யூப் அஸ்ஸக்தியானீ, முஹம்மத் பின் அவ்ன் ஆகியோரும், பிறகு ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களும், பிறகு யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
ஆகியோரும் இந்த ஆய்வில் சிறந்து விளங்கினர்.

நான் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களிடம், “மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ் (மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்) அவர்களின் நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
(ரஹ்) அவர்கள், ‘அறிவிப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்கள் மிகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தார்’ என்று என்னிடம் கூறினார் என்று குறிப்பிட்டார்.

(நூல்: ஷரஹ் இலலுத் திர்_மிதீ-1/355…)


பிறகு, அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சன தகவல்களுடன் வேறு சிலவற்றையும் ஹதீஸ்துறை அறிஞர்கள் கவனித்தனர். உதாரணம் முர்ஸலாக இருப்பது, மவ்கூஃபாக இருப்பது, முன்கதிஃயாக இருப்பது இதுபோன்றவை.

இது போன்ற சட்டங்கள் ஃபிக்ஹ் நூல்கள், உஸூல் நூல்கள், தஃப்ஸீர் நூல்கள் போன்றவற்றில் கலந்து இருந்தன. ஷாஃபிஈ இமாம் அவர்கள் தொகுத்த அர்ரிஸாலா, அல்உம்மு போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பல இடங்களில் பரவிக் கிடந்த ஹதீஸ்கலை சட்டங்களை பிறகு வந்தவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஒன்று சேர்த்தனர். (இன்ஷா அல்லாஹ், ஹதீஸ்கலை நூல்கள் உருவான வரலாறு பற்றிய பகுதியில் இதைப் பற்றி கூறப்படும்)

ஹதீஸ்துறைச் சார்ந்த நூல்களைப் பற்றி விரிவான விளக்கத்தை الرسالة المستطرفة لبيان مشهور كتب السنة المشرفة – என்ற நூலில் விரிவாக காணலாம்.


1 . முதன் முதலில் சரியான ஹதீஸை மட்டுமே தொகுக்க வேண்டும் என்ற நிபந்தனைப்படி தொகுத்தவர் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் (ஹிஜ்ரி-256) ஆவார்கள்.

2 . பிறகு அவரின் மாணவரான முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் (ஹிஜ்ரி-261) ஆவார்கள் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

(இவர்கள் இருவருமே நாங்கள் அனைத்து சரியான ஹதீஸ்களை தொகுத்துவிட்டோம் என்று குறிப்பிடவில்லை)


3 . இவர்களுக்கு முன்பே மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ஹிஜ்ரி-179) அவர்கள் ஒரு நூலை தொகுத்திருந்தாலும் அதில் முர்ஸல், முன்கதிஃ யான செய்திகளும் கலந்து இருந்தன.

(இவ்வாறே வேறு சிலர் தொகுத்த நூல்களிலும் சரியான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருந்தன. உதாரணம்-முஸன்னஃப், முஸ்னத், ஸுனன், ஆஸார் போன்றவை)


4 . இப்னு மாஜா (ஹிஜ்ரி-273)

5 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
(ஹிஜ்ரி-275)

6 . திர்மிதீ (ஹிஜ்ரி-279)

7 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
(ஹிஜ்ரி-303)

போன்றோரும் சில ஹதீஸ்நூல்களை தொகுத்துள்ளனர். இவற்றில் ஸுனன் அர்பஆ என்று கூறப்படும் நான்கு நூல்கள் முக்கியமானவை. இவற்றில் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன.


8 . இப்னுல் ஜாரூத் (ஹிஜ்ரி-728)

9 . இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
(ஹிஜ்ரி-728)

10 . இப்னுஷ் ஷர்கீ-அபூஹாமித் (ஹிஜ்ரி-728)

11 . காஸிம் பின் அஸ்பஃக் (ஹிஜ்ரி-728)

12 . இப்னுஸ் ஸகன் (ஹிஜ்ரி-728)

13 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
(ஹிஜ்ரி-728)

14 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
(ஹிஜ்ரி-728)

15 . ளியாஉத்தீன் அல்மக்திஸீ (ஹிஜ்ரி-728)

போன்றோரும் சரியான ஹதீஸ்களைத் தொகுக்க வேண்டும் என்ற நிபந்தனைப்படி ஹதீஸ் நூல்களை தொகுத்துள்ளனர். (இவற்றில் சிலவற்றில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன)


 


ஹதீஸ்களை அறிவிப்பதிலும், சரியான ஹதீஸகள், பலவீனமான ஹதீஸ்கள் என்ற தரத்தைக் கூறியவர்களிலும் பிரபலமாக இருந்த (ஹதீஸ்துறையின், மார்க்கசட்டத் துறையின்) அறிஞர்களில் சிலர்:

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ஹிஜ்ரி-161)

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ஹிஜ்ரி-179)

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் (ஹிஜ்ரி- 198)

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
(ஹிஜ்ரி-198)

யஹ்யா பின் மயீன் (-ஹிஜ்ரி 233)

அலீ பின் மதீனீ (ஹிஜ்ரி-234)

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் (ஹிஜ்ரி-241)

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ஹிஜ்ரி-256)

முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ஹிஜ்ரி-261)

அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
(ஹிஜ்ரி-264)

அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
(ஹிஜ்ரி-277)

திர்மிதீ (ஹிஜ்ரி-279)

பஸ்ஸார் (ஹிஜ்ரி-292)

நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
(ஹிஜ்ரி-303)

முஹம்மத் பின் இப்ராஹீம்-இப்னுல் முன்திர் (ஹிஜ்ரி-319)

அபூஜஅஃபர் அத்தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
(ஹிஜ்ரி-321)

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
(ஹிஜ்ரி-354)

தப்ரானீ (ஹிஜ்ரி-360)

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
(ஹிஜ்ரி-385)


  • அல்கத்தாபீ பிறப்பு ஹிஜ்ரி 319
    இறப்பு ஹிஜ்ரி 388
    வயது: 69
    (ஹிஜ்ரி-388)

இவருக்கு முன்னால் சில ஹதீஸ் விரிவுரை நூல்கள் இருந்தாலும் விரிவாக ஹதீஸ் நூல்களுக்கு விரிவுரை எழுதும் கலையை இவர் தான் தொடங்கி வைத்தார். ‘அஃலாமுல் ஹதீஸ்-புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
நூலின் விரிவுரை, மஆலிமுஸ் ஸுனன்-அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நூலின் விரிவுரை’ இவரது முக்கிய நூல்கள்.


ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
(ஹிஜ்ரி-405)

இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
(ஹிஜ்ரி-456)

பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
(ஹிஜ்ரி-458)

இப்னு அப்துல்பர் (ஹிஜ்ரி-463)

அப்துல்ஹக் அல்இஷ்பீலீ (ஹிஜ்ரி-581)

இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
(ஹிஜ்ரி-597)

இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
(ஹிஜ்ரி-628)

அப்துல்அளீம் அல்முன்திரீ (ஹிஜ்ரி-656)

நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
(ஹிஜ்ரி-676)

இப்னு தகீகுல் ஈத் பிறப்பு ஹிஜ்ரி 625
இறப்பு ஹிஜ்ரி 702
வயது: 77
(ஹிஜ்ரி-702)

 

 

இப்னு தைமியா (ஹிஜ்ரி-728)

மிஸ்ஸீ (ஹிஜ்ரி 742)

இப்னு அப்துல்ஹாதீ (ஹிஜ்ரி 744)

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
(ஹிஜ்ரி-748)

இப்னுத் துர்கிமானீ (ஹிஜ்ரி-750)

இப்னுல் கய்யிம் (ஹிஜ்ரி-751)

ஸைலஈ (ஹிஜ்ரி-762)

இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
(ஹிஜ்ரி-774)

இப்னு ரஜப் (ஹிஜ்ரி-795)

அல்இராகீ (ஹிஜ்ரி-806)

நூருத்தீன் ஹைஸமீ (ஹிஜ்ரி-807)

பூஸீரீ (ஹிஜ்ரி-840)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
(ஹிஜ்ரி-852)

ஸகாவீ (ஹிஜ்ரி-902)

ஸுயூதீ (ஹிஜ்ரி-911)


முல்லா அலீ காரி (ஹிஜ்ரி-1014)

அல்முனாவீ (ஹிஜ்ரி-1031)

இப்னு அல்லான் (ஹிஜ்ரி-1057)

முர்தளா அஸ்ஸபீதீ (ஹிஜ்ரி-1205)

ஷவ்கானீ (ஹிஜ்ரி-1250)

அளீம் ஆபாதீ (ஹிஜ்ரி-1329)

கலீல் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸஹாரன்ஃபூரீ (ஹிஜ்ரி-1346)

அப்துர்ரஹ்மான் அல்முபாரக்பூரீ (ஹிஜ்ரி-1353)

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் (ஹிஜ்ரி-1377)

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸித்தீக் அல்ஃகாமிரீ (ஹிஜ்ரி-1320 – ஹிஜ்ரி-1380)

முஅல்லிமீ (ஹிஜ்ரி-1386)

ஹபீபுர்ரஹ்மான் அல்அஃளமீ (ஹிஜ்ரி-1412)

ஹம்மாத் அல்அன்ஸாரீ  (ஹிஜ்ரி-1418)

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
(ஹிஜ்ரி-1420)

முக்பில் (ஹிஜ்ரி-1422)

அப்துல்காதிர் அல்அர்னாவூத் (ஹிஜ்ரி-1347 -ஹிஜ்ரி-1425)

பஷீர் பின் முஹம்மத் (ஹிஜ்ரி-1431)

ஸுப்ஹீ பின் ஜாஸிம் (ஹிஜ்ரி-1434)

ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
(ஹிஜ்ரி-1438)

ஹுஸைன் ஸுலைம் அஸத் (ஹிஜ்ரி-1351 – ஹிஜ்ரி-1443)

அபூஇஸ்ஹாக் ஹுவைனீ (ஹிஜ்ரி-1446)

யாஸிர் அல்ஃபத்ஹீ …

….

முஸ்தஃபா அல்அதவீ (ஹிஜ்ரி-1374 – …)

அப்துல்லாஹ் ஸஃத் (ஹிஜ்ரி-1381 – …)

ஸுலைமான் பின் நாஸிர் அல்அல்வான் (ஹிஜ்ரி-1389 – …)

முஹம்மத் அவாமா (ஹிஜ்ரி-1358 – …)

 


 


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.