Month: December 2020

Musnad-Ahmad-8493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8493. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல்

“அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்”

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


وَاللَّهِ، إِنِّي لَأَسْتَغْفِرُ وَأَتُوبُ فِي كُلِّ يَوْمٍ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً


Musnad-Ahmad-7793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7793. நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً، وَأَتُوبُ إِلَيْهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-35071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

35071. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29442. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»


Bazzar-95

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

95. அபூ ஆத்திகா என்பவர் அறிவிக்கும் சீனா சென்றேனும் கல்வியை தேடு என்ற செய்தி அடிப்படையற்றது. அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை.



Shuabul-Iman-1543

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1543. சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும்.


اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ


Almujam-Alawsat-994

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

994. நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ نَبِيًّا»


Kubra-Bayhaqi-19273

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19273. நபி (ஸல்) அவர்கள்,  நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் கைவிட்டது இந்த செய்தியின் காரணமாகத்தான் என்று அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செய்தி கதாதா (ரஹ்) வழியாகவும், அனஸ் (ரலி) வழியாகவும் வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அவை ஒரு பொருட்டே அல்ல.

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ.


Bazzar-7281

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7281. நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ نَبِيًّا.


Musannaf-Abdur-Razzaq-7960

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7960. நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ بِالنُّبُوَّةِ»


Next Page » « Previous Page