1543. சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:
இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும்.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أخبرنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، حدثنا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ح وَأَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ الْأَصْبَهَانِيُّ، أخبرنا أَبُو سَعِيدِ بْنُ زِيَادٍ، حدثنا جَعْفَرُ بْنُ عَامِرٍ الْعَسْكَرِيُّ، قَالَا: حدثنا الْحَسَنُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي عَاتِكَةَ، – وَفِي رِوَايَةِ أَبِي عَبْدِ اللهِ – حدثنا أَبُو عَاتِكَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
هَذَا حَدِيثٌ مَتْنُهُ مَشْهُورٌ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ ” وَقَدْ رُوِيَ مِنْ أَوْجُهٍ، كُلُّهَا ضَعِيفٌ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1543.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1539.
إسناد شديد الضعف فيه طريف بن سلمان الكوفي وهو منكر الحديث
- இதை பதிவு செய்த இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் இது பலவீனமான செய்தி என குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் طريف بن سلمان தரீஃப் பின் ஸல்மான் என்ற அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) ஆவார். - இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-95 .
சமீப விமர்சனங்கள்