Month: June 2022

Almujam-Alawsat-1112

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1112. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று மூன்று தடவை கூறிவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا يَلْتَمِسُ الْخَيْرَ وَالذِّكْرَ، مَا لَهُ؟ قَالَ: «لَا شَيْءَ لَهُ» يَقُولُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا خَلَصَ لَهُ، وَابْتُغِيَ بِهِ»


Kubra-Nasaayi-4333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நன்மையையும், புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்தவர்.

4333. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்தார்கள்.

அவர் இதையே திரும்ப திரும்ப மூன்று தடவை கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்துவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.

 


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ مَا لَهُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ يَقُولُ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ»، ثُمَّ قَالَ: «إِنَّ اللهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»


Nasaayi-679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா, என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டன்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ


Tirmidhi-210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் என்னக் கூறவேண்டும்?

210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர், வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா, என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ المُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Ibn-Majah-721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபில் இஸ்லாமி தீனா, வபி முஹம்மதின் நபிய்யா,  என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்  நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Musnad-Ahmad-1565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) வ அன அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீனா பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Almujam-Alkabir-838

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

838. ஒருவர் காலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் சேர்ப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: முனைதிர் (ரலி)

 


مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، فَأَنَا الزَّعِيمُ لِآخُذَ بِيَدِهِ حَتَّى أُدْخِلَهُ الْجَنَّةَ


Tirmidhi-3389

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் மாலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ قَالَ حِينَ يُمْسِي: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ “


Almujam-Alkabir-921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

921. ஒரு அடியார் அல்லது ஒரு மனிதர் அல்லது ஒரு முஸ்லிம் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” எனக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான அபூஸல்லாம்.


مَا مِنْ عَبْدٍ أَوْ إِنْسَانٍ أَوْ مُسْلِمٍ يَقُولُ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دَيْنًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


Hakim-1905

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1905. அபூஸல்லாம்-ஸாபிக் பின் நாஜியா அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹிம்ஸ் நகர பள்ளிவாசலில் அமர்ந்து இருக்கும் போது ஒரு மனிதர் கடந்து சென்றார். அப்போது மக்கள், “(இதோ) இவர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தவர் என்று கூறினர். உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “ஒரு அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” எனக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று அறிவித்தார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)


كُنَّا جُلُوسًا فِي مَسْجِدِ حِمْصٍ فَمَرَّ رَجُلٌ فَقَالُوا هَذَا خَدَمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَضْتُ إِلَيْهِ فَسَأَلْتُهُ قُلْتُ، حَدِّثْنِي حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَتَدَاوَلْهُ الرِّجَالُ بَيْنَكُمْ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” مَا مِنْ عَبْدٍ يَقُولُ: حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


Next Page » « Previous Page