பாடம் : 90
நபி (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்காகப் பரிந்துரை செய்ததும், அதை முன்னிட்டு அவர்களுக்கு (நரக வேதனை) குறைக்கப்பட்டதும்.
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!” என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 1
(முஸ்லிம்: 357)90 – بَابُ شَفَاعَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ وَالتَّخْفِيفِ عَنْهُ بِسَبَبِهِ
وَحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ قَالَ
يَا رَسُولَ اللهِ، هَلْ نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ، فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ؟ قَالَ: «نَعَمْ، هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، وَلَوْلَا أَنَا لَكَانَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ»
Tamil-357
Shamila-209
JawamiulKalim-313
ஸலாம் அழைக்கும் . மாஷா அல்லாஹ் .மகத்தான பணி.அங்கொன்றும் இங்கொன்றும் ஹதீதுகளை மொழி பெயர்காமல் , மொத்த தொகுப்பாக மொழி பெயர்க்கலாமே?
வ அலைக்கும் ஸலாம். மொத்த தொகுப்பாக என்றால் எப்படி மொழி பெயர்ப்பது?
நாம் ஹதீஸ்களை ஆய்வு ரீதியில் தொகுப்பதால் ஒரு ஹதீஸின் பல அறிவிப்பாளர்தொடர்களையும், நூல்களையும் சேர்த்தே பதிவு செய்கிறோம். நமது தளத்தில் கேட்கப்படும் கேள்விகளை கவனித்தும் ஹதீஸ்களை தொகுக்கிறோம். இத்துடன் சில நூல்களின் ஹதீஸ்களை வரிசையாகவும் தொகுத்து வருகிறோம். பதிவு செய்துள்ள செய்திகளையும் முடிந்தவரை சரியானதா பலவீனமானதா என்று ஆய்வும் செய்கிறோம். துஆச் செய்யவும்.