தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-1024

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளர் பற்றியோ இணைவைப்பவர் பற்றியோ நான் பயப்படவில்லை. ஏனெனில் இறைநம்பிக்கையாளரின் இறைநம்பிக்கை அவரை (குழப்பம் செய்வதை விட்டு) தடுத்து விடும். இணைவைப்பவரின் நிராகரிப்பு அவரை வீழ்த்திவிடும்.

என்றாலும் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான். அவர்கள் (வெளிப்படையில்) நீங்கள் அறிந்த நல்ல விசயங்களைக் கூறுவார்கள். (அந்தரங்கத்தில்) நீங்கள் வெறுப்பவற்றை செய்வார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(almujam-assaghir-1024: 1024)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَهْلِ بْنِ مُحَمَّدٍ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ بَشِيرٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ فِي الْجَنَّةِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ:

«إِنِّي لَا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي مُؤْمِنًا وَلَا مُشْرِكًا , أَمَّا الْمُؤْمِنُ فَيَحْجِزُهُ إِيمَانُهُ , وَأَمَّا الْمُشْرِكُ فَيَقْمَعُهُ كُفْرُهُ , وَلَكِنْ أَتَخَوَّفُ عَلَيْكُمْ مُنَافِقًا عَالِمُ اللِّسَانِ يَقُولُ مَا تَعْرِفُونَ وَيَعْمَلُ مَا تُنْكِرُونَ»

لَمْ يَرْوِهِ عَنْ أَبِي إِسْحَاقَ إِلَّا عَبَّادُ بْنُ بَشِيرٍ وَلَا يُرْوَى عَنْ عَلِيٍّ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-1024.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-1022.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் யஹ்யா, ராவீ அப்பாத் பின் பிஷ்ர் ஆகியோர் அறியப்படாதவர்கள். தப்ரானீ அவர்களின் அவ்ஸதில் அப்பாத் பின் பிஷ்ர் என்று இடம்பெற்றுள்ளது. ஸகீரில் அப்பாத் பின் பஷீர் என்று இடம்பெற்றுள்ளது. (இதில் வருபவர் அப்பாத் பின் பஷீர் என்றால் அவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். அப்பாத் பின் பிஷ்ர் என்றால், அவர் அறியப்படாதவர் ஆவார்.
  • மேலும் ராவீ ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/331)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7065 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.