அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) உரைமேடையில் இருக்கும் போது அறிஞனான நயவஞ்சகனை விட்டு உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன். அப்போது மக்கள், நயவஞ்சகன் எப்படி அறிஞனாக இருப்பான் என்று கேட்டார்கள். அதற்கவர், அவன் நல்லதை பேசுவான் தீயதை செய்வான் என்று கூறினார்கள்.
(shuabul-iman-1640: 1640)
أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، حدثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ قُرَيْشٍ، أخبرنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حدثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حَسَّانَ، حدثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، حدثنا مَيْمُونٌ الْكُرْدِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، قَالَ:
سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: ” إِيَّاكُمْ وَالْمُنَافِقَ الْعَالِمَ ” قَالُوا: وَكَيْفَ يَكُونُ الْمُنَافِقُ عَليِمًا؟ قَالَ: ” يَتَكَلَّمُ بِالْحَقِّ وَيَعْمَلُ بِالْمُنْكَرِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1640.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1639.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மது பின் ஹுஸைன்-அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ பற்றி, இவர் ஸூஃபி கொள்கையுடையவர்களுக்காக ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று முஹம்மது பின் யூசுப் அல்கத்தான் அவர்கள் கூறியதாக கதீப் பக்தாதீ அவர்கள் கூறியதை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: ஸியரு அஃலாமின் நுபலாஃ-13/16, மீஸானுல் இஃதிதால்-7419, தாரீகு பக்தாத்-2/248)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-143 .
சமீப விமர்சனங்கள்