அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 143)حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا دَيْلَمُ بْنُ غَزْوَانَ عَبْدِيٌّ، حَدَّثَنَا مَيْمُونٌ الْكُرْدِيُّ، حَدَّثَنِي أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-143.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
1 . இந்த செய்தி உமர் (ரலி) வழியாக நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்த செய்தியை மவ்ஃகூப் என்று முடிவு செய்வதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-246, 2/246)
இதைப் பற்றிய விளக்கம்:
- இந்த செய்தியை மைமூன் அல்குர்தீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் தைலம் பின் அல்கஸ்வான் என்பவரும், ஹஸன் பின் ஜஃபர் என்பவரும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளனர். தைலம் என்பவர் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். ஹஸன் பின் ஜஃபர் பலவீனமானவர்.
(நூல்கள்: அஹ்மத்-143 , ஸிஃபதுல் முனாஃபிக்-ஃபிர்யாபீ-25)
- இந்த செய்தியை மைமூன் அல்குர்தீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத் என்பவரும், அபூஉஸ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஅல்லா பின் ஸியாத் என்பவரும் உமர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். இவ்விருவரும் தைலம் என்பவரை விட பலமானவர்கள் என்பதால் இவர்கள் அறிவிக்கும் செய்திக்கே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முன்னுரிமை தருகின்றார்.
(நூல்கள்: …ஷுஃபுல் ஈமான்-1640 , ஸிஃபதுல் முனாஃபிக்-ஃபிர்யாபீ-26)
மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வந்திருப்பதை தவறு என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2/170)
2 . ஆனால் இதை ஆய்வு செய்த சில அறிஞர்கள், உமர் (ரலி) வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் இருப்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வந்துள்ள செய்தியே சரியானது என்று கூறியுள்ளனர்.
3 . சிலர், உமர் (ரலி) வழியாக மவ்கூஃபாக வந்துள்ள செய்திகளில் தான் விமர்சனம் உள்ளது என்றும் உமர் (ரலி) வழியாக நபியின் கூற்றாக வந்துள்ள செய்தி பலமானது என்றும் கூறுகின்றனர். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகளில் (வரும் ராவீ ஹுஸைன் அல்முஅல்லிம் பற்றி இவர் குளறுபடியாக அறிவிப்பவர் என்று யஹ்யா அல்கத்தான் கூறியுள்ளார் என்பதால்) விமர்சனம் உள்ளது என்றும் கூறுகின்றனர்…
மேற்கண்ட கருத்துக்களில் மூன்றாவது கருத்திற்கே ஆதாரங்கள் பலமாக உள்ளன…
2 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-143 , 310 , முஸ்னத் பஸ்ஸார்-305 , 306 , ஷுஅபுல் ஈமான்-1640 , 1641 ,
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3514 .
ஜசாகல்லாஹ்…
இந்த ஹதீஸ். பைஹகீயின் ஷுஅபுல் ஈமான் (1729. 1731) எனும் நூலிலும் பதிவாகியுள்ளது. அதில் “எனக்குப் பின் என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது அறிவுப்பூர்வமாகப் பேசி அநியாயமாகச் செயல்படும் ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்” (1731) என இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியும் இதே தரத்தில் அமைந்தது தானா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த செய்தி இடம்பெறும் அனைத்து நூல்களையும் இன்னும் பதிவு செய்யவில்லை. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்த செய்திகளின் தரங்களை முடித்துவிட்டு மற்ற செய்திகள் பதிவு செய்யப்படும். நாம் பார்த்தவரை சிலர் இந்த செய்தியை சரியானது என்றும் கூறியுள்ளனர். சிலர் மவ்கூஃப் என்றும் கூறியுள்ளனர். இரு கருத்தின் ஆதாரங்கள் எப்படி உள்ளது என்று பார்த்தே தரம் என்னவென்று முடிவு செய்ய முடியும்.
ஜசாகல்லாஹ், நல்லது ஜி…