தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3514

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை உமர் (ரலி) வழியாகவே நாம் மனனமிட்டுள்ளோம். என்றாலும் அது நபியின் கூற்றா? என்பதில் அறிவிப்பாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர் என்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தியை கூறியுள்ளோம்.

என்றாலும் உமர் (ரலி) வழியாக வரும் செய்தி ஆதாரத்திற்கேற்ற செய்திதான் என்பதால் அதை நாம் கூறியுள்ளோம். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தி ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் அதையும் கூறியுள்ளோம்.

(bazzar-3514: 3514)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: نَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: نَا نَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

«حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»

وَهَذَا الْكَلَامُ لَا نَحْفَظُهُ إِلَّا عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَاخْتَلَفُوا فِي رَفْعِهِ عَنْ عُمَرَ فَذَكَرْنَاهُ، عَنْ عِمْرَانَ إِذْ كَانَ يُخْتَلَفُ فِي رَفْعِهِ عَنْ عُمَرَ، وَإِسْنَادُ عُمَرَ إِسْنَادٌ صَالِحٌ، فَأَخْرَجْنَاهُ عَنْ عُمَرَ، وَأَعَدْنَاهُ عَنْ عِمْرَانَ لِحُسْنِ إِسْنَادِ عِمْرَانَ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3514.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2994.




1 . இந்த செய்தி உமர் (ரலி) வழியாக நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இதன் அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இந்த செய்தியை மவ்ஃகூப் என்று முடிவு செய்வதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-246, 2/246)

இதைப் பற்றிய விளக்கம்:

  • இந்த செய்தியை மைமூன் அல்குர்தீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் தைலம் பின் அல்கஸ்வான் என்பவரும், ஹஸன் பின் ஜஃபர் என்பவரும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளனர். தைலம் என்பவர் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். ஹஸன் பின் ஜஃபர் பலவீனமானவர்.

(நூல்கள்: அஹ்மத்-143 , ஸிஃபதுல் முனாஃபிக்-ஃபிர்யாபீ-25)

  • இந்த செய்தியை மைமூன் அல்குர்தீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத் என்பவரும், அபூஉஸ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஅல்லா பின் ஸியாத் என்பவரும் உமர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். இவ்விருவரும் தைலம் என்பவரை விட பலமானவர்கள் என்பதால் இவர்கள் அறிவிக்கும் செய்திக்கே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் முன்னுரிமை தருகின்றார்.

(நூல்கள்: …ஸிஃபதுல் முனாஃபிக்-ஃபிர்யாபீ-26, ஷுஃபுல் ஈமான்-1640 ,

மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வந்திருப்பதை தவறு என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2/170)

இதைப் பற்றிய விளக்கம்:

  • இந்த செய்தியை ஹுஸைன் அல்முஅல்லிம் என்பவரிடமிருந்து முஆத் பின் முஆத் என்பவர் முஆத் பின் முஆத் —> ஹுஸைன் அல்முஅல்லிம் —> இப்னு புரைதா —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

  • இந்த செய்தியை ஹுஸைன் அல்முஅல்லிம் என்பவரிடமிருந்து அப்துல்வஹ்ஹாப் பின் அதாஃ, ரவ்ஹு பின் உபாதா ஆகியோர் இப்னு புரைதா —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்….

(நூல்: முஸ்னதுல் ஹாரிஸ்-466,..)

2 . ஆனால் இதை ஆய்வு செய்த சில அறிஞர்கள், உமர் (ரலி) வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் இருப்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வந்துள்ள செய்தியே சரியானது என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்த செய்தியை ஷுஃபுல் ஈமான்-1640 இல் மைமூன் அல்குர்தீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத் பலமானவர் என்றாலும் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் ஆசிரியரும், அவரின் ஆசிரியரும் யார் என அறியப்படாதவர்கள் என்பதால் அது பலவீனமாகிறது. எனவே உமர் (ரலி) வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் இருப்பதால் அதை பலவீனம் என்று முடிவு செய்யவேண்டும். இதனால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தி தவறு என்று கூறமுடியாது.
மேலும் அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக பல செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இதுவே ஏற்கத்தக்கதாகும் என்றும் கூறுகின்றனர்.

3 . சிலர், உமர் (ரலி) வழியாக மவ்கூஃபாக வந்துள்ள செய்திகளில் தான் விமர்சனம் உள்ளது என்றும் உமர் (ரலி) வழியாக நபியின் கூற்றாக வந்துள்ள செய்தி பலமானது என்றும் கூறுகின்றனர். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகளில் (வரும் ராவீ ஹுஸைன் அல்முஅல்லிம் பற்றி இவர் குளறுபடியாக அறிவிப்பவர் என்று யஹ்யா அல்கத்தான் கூறியுள்ளார் என்பதால்) விமர்சனம் உள்ளது என்றும் கூறுகின்றனர்…

மேற்கண்ட கருத்துக்களில் மூன்றாவது கருத்திற்கே ஆதாரங்கள் பலமாக உள்ளன…

1 . இந்தக் கருத்தில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3514 , ஸிஃபதுல் முனாஃபிக்-ஃபிர்யாபீ-23 , இப்னு ஹிப்பான்-80 , அல்முஃஜமுல் கபீர்-593-2 , ஷுஅபுல் ஈமான்-1639 , ஸியரு அஃலாமின் நுபலாஃ-10182 ,

2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-143 .

3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7065 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.