தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-26622

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலைநேரம் ஆனதும் திண்ணை (நபி)த்தோழர்களான சிலரை மற்ற நபித்தோழர்களிடம் பிரித்துக் கொடுப்பார்கள். எனவே அவர்களில் ஒருவர் தன்னுடன் ஒருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் இருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் மூவரை அழைத்துச் செல்வார். (இவ்வாறு ஒருவர் பத்து பேரைக் கூட அழைத்துச் செல்வார்) என்று கூறிவிட்டு இவர்களில் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் தன்னுடன் என்பது பேரை அழைத்துச் செல்வார் என்று இப்னு ஸீரீன் (ரஹ்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26622)

حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى، قَسَّمَ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ بَيْنَ أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ»، فَكَانَ الرَّجُلُ يَذْهَبُ بِالرَّجُلِ، وَالرَّجُلُ بِالرَّجُلَيْنِ، وَالرَّجُلُ بِالثَّلَاثَةِ حَتَّى ذَكَرَ عَشَرَةً، قَالَ: فَكَانَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَرْجِعُ إِلَى أَهْلِهِ بِثَمَانِينَ يُعَشِّيهِمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26622.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-26038.




இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்களின் முர்ஸலான செய்திகளை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் இரு கருத்து உள்ளது…

…இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20713 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.