தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-2702

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஒருவர், “நான் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன்” என்று ஏழு தடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர் (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: அபூஅல்கமா (ரஹ்)

இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

(அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யஃலா பின் அதாஃ அவர்கள் இதை அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாகவும், அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யூனுஸ் பின் கப்பாப் என்பவர் இதை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்)

(tayalisi-2702: 2702)

حَدَّثَنَا دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عَلْقَمَةَ، قَالَ شُعْبَةُ: وَحَدَّثَنِي يُونُسُ بْنُ خَبَّابٍ، سَمِعَ أَبَا عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَلَمْ يَرْفَعْهُ يَعْلَى إِلَى أَبِي هُرَيْرَةَ، قَالَ:

مَنْ قَالَ: أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعًا، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَعَاذَ مِنَ النَّارِ، قَالَتِ النَّارَ: اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2702.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2692.




  • இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடர் இரண்டாகும். ஒன்று அபூஅல்கமாவிடமிருந்து யஃலா பின் அதாஃ அவர்கள் அறிவிக்கும் தொடர். இது பலமானது. மற்றொன்று அபூஅல்கமாவிடமிருந்து யூனுஸ் பின் கப்பாப் என்பவர் அறிவிக்கும்தொடர். இது பலவீனமானது.
  • ராவீ-49794-யூனுஸ் பின் கப்பாப் என்பவர் பற்றி சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் இவர் ராஃபிளா கொள்கையில் ஊறிப்போனவர்; உஸ்மான் (ரலி) அவர்களை திட்டக்கூடியவர்; இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை நம்பகமானவர் என்றும் தவறிழைப்பவர் என்றும், ராஃபிளா கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/468, தக்ரீபுத் தஹ்தீப்-1/1098)

இந்த செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக நபியின் கூற்றாகவும், நபித்தோழரின் கூற்றாகவும் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இது நபித்தோழரின் கூற்று என்பதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-11/188)

இந்த செய்தி நபித்தோழரின் கூற்றாக இருந்தாலும் இது நபித்தோழர் சுயமாக ஆய்வு செய்து கூறும் செய்தி அல்ல என்பதால் இது நபி (ஸல்) அவர்களின் சொல் போன்றதே என்று சிலர் கூறுகின்றனர். (இதனை ஹுக்முல் மர்ஃபூஃ என்று கூறுவர்)

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஅல்கமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702 , முஸ்னத் பஸ்ஸார்-9679 , 9680 , 9681 ,

  • யூனுஸ் பின் கப்பாப் —> ஸல்மான் (அபூஹாஸிம்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-213 , முஸ்னத் அபீ யஃலா-6192 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2572 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5079 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.