தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-150

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முதன் முதலில் (தாங்கள்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஏழு பேர் பகிரங்கப்படுத்தினர். அந்த ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், அம்மார் (ரலி) அவர்களும், அம்மாரின் தாயார் சுமையா (ரலி) அவர்களும், ஸுஹைப் (ரலி) அவர்களும், பிலால் (ரலி) அவர்களும், மிக்தாத் (ரலி) அவர்களும் ஆவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபின் மூலம் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (எதிரிகளின் தொல்லையிலிருந்து) பாதுகாத்துக் கொண்டான். அபூபக்ர் (ரலி) அவர்களை அவர்களது சமூகத்தாரின் மூலம் அல்லாஹ் பாதுகாத்தான். ஆனால் மற்றவர்களை இணைவைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கிடத்தி சுட்டெரித்தனர். இதனால் இவர்கள், (இனி யாரும் இஸ்லாத்தை வெளிப்படுத்தக்கூடாது எனும் இணைவைப்பாளர்களின் நோக்கத்திற்கு) இணங்கிப் போயினர். பிலால் (ரலி) அவர்களைத் தவிர. அவர் அல்லாஹ்வின் விசயத்தில் தன் உயிரை துச்சமாகக் கருதினார். மேலும் அவர் (அவரின் கூட்டத்தாரின் பார்வையில்) இழிவானவராக இருந்தார். (அதனால் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை). எனவே அவரை இணைவைப்பாளர்கள் பிடித்து (மக்காவின்) சிறுவர்களிடம் ஒப்படைத்தனர். அச்சிறுவர்கள் அவரைப் பிடித்து (அடித்தவர்களாக) மக்காவின் கணவாய்களில்-தெருக்களில் இழுத்துச் செல்வர். அப்படியிருந்தும் பிலால் (ரலி) அவர்கள், (அல்லாஹ்) ஒருவனே! (அல்லாஹ்)  ஒருவனே! என்று கூறிக் கொண்டிருப்பார்.

(இப்னுமாஜா: 150)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:

كَانَ أَوَّلَ مَنْ أَظْهَرَ إِسْلَامَهُ سَبْعَةٌ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعَمَّارٌ، وَأُمُّهُ سُمَيَّةُ، وَصُهَيْبٌ، وَبِلَالٌ، وَالْمِقْدَادُ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنَعَهُ اللَّهُ بِعَمِّهِ أَبِي طَالِبٍ، وَأَمَّا أَبُو بَكْرٍ فَمَنَعَهُ اللَّهُ بِقَوْمِهِ، وَأَمَّا سَائِرُهُمْ فَأَخَذَهُمُ الْمُشْرِكُونَ، وَأَلْبَسُوهُمْ أَدْرَاعَ الْحَدِيدِ، وَصَهَرُوهُمْ فِي الشَّمْسِ، فَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وَاتَاهُمْ عَلَى مَا أَرَادُوا، إِلَّا بِلَالًا، فَإِنَّهُ هَانَتْ عَلَيْهِ نَفْسُهُ فِي اللَّهِ، وَهَانَ عَلَى قَوْمِهِ، فَأَخَذُوهُ فَأَعْطَوْهُ الْوِلْدَانَ، فَجَعَلُوا يَطُوفُونَ بِهِ فِي شِعَابِ مَكَّةَ، وَهُوَ يَقُولُ: أَحَدٌ أَحَدٌ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-147.
Ibn-Majah-Shamila-150.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-147.




تاريخ ابن معين – رواية الدوري (3/ 320)

1529 – سَمِعت يحيى يَقُول حدث يحيى بن أَبى بكير عَن زَائِدَة عَن عَاصِم عَن زر عَن عبد الله قَالَ أول من أظهر إِسْلَامه سَبْعَة قَالَ يحيى هَذَا عَن مَنْصُور عَن مُجَاهِد هَكَذَا حدث بِهِ النَّاس

تاريخ ابن معين – رواية الدوري (3/ 490)

2393 – سَمِعت يحيى يَقُول الحَدِيث الَّذِي يرويهِ بن أبي بكير عَن زَائِدَة عَن عَاصِم عَن زر عَن عبد الله فِي قصَّة عمار إِنَّمَا يرويهِ سُفْيَان عَن مَنْصُور عَن مُجَاهِد فَقَط قَالَ أَبُو الْفضل قصَّة عمار أول من أظهر إِسْلَامه سَبْعَة قَالَ أَبُو الْفضل هَذَا بَاطِل إِنَّمَا هُوَ من رأى مُجَاهِد

  • இந்த செய்தியை ஸுஃப்யான் பின் உயைனாவும், (மற்ற) மக்களும் மன்ஸூர் —> முஜாஹித் என்ற அறிவிப்பாளர்தொடரில் (முஜாஹித் அவர்களின் கூற்றாகவே) அறிவித்துள்ளனர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறினார் என்றும், அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி பாதில் (பிழையானது) என்றும், இது முஜாஹித் அவர்களின் கூற்று என்றும் அபுல் ஃபள்ல் அப்பாஸ் அத்தூரீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-1529, 3/320, 2393, 3/490)

  • இந்த செய்தி பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை ஸாயிதா பின் குதாமா அவர்களிடமிருந்து யஹ்யா பின் அபூபுகைர் என்பவரே தனித்து அறிவித்துள்ளார். இது தவறாகும். ஸாயிதா அவர்கள், மன்ஸூர் —> முஜாஹித் என்ற அறிவிப்பாளர்தொடரில் முஜாஹித் அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். (இதுவே உண்மையாகும்) என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் பதிலளித்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-708, 5/63)

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்கள் கூறியதைப் போன்று ஸாயிதா பின் குதாமா அவர்கள் மன்ஸூர் —> முஜாஹித் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தி நமக்கு கிடைக்கவில்லை.

  • என்றாலும் இந்த செய்தியை ஸாயிதா பின் குதாமா அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அலீ அல்ஜுஃபீ அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளார் என்பதாலும், இந்த செய்தியில் ஆஸிம் பின் அபுன்நஜூத் இடம்பெறுவதாலும் இந்த செய்தியை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(பார்க்க: ஹாகிம்-5238)

  • யஹ்யா பின் அபூபுகைர் என்பவர் பலமானவர், ஹுஸைன் பின் அலீ அல்ஜுஃபீ என்பவர் மிக பலமானவர் என்பதாலும், இது வேறு அறிவிப்பாளர்தொடர் என்பதாலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்ற சில அறிஞர்கள் இப்னுமயீன், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோரின் விமர்சனத்தை கணக்கில் எடுக்காமல் இந்த செய்தியை சரியானது என்று கூறுகின்றனர்.
  • இதில் அதிகமாக நபித்தோழர்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. மேலும் இது வரலாற்று செய்தி என்பதால் இது சரியாக இருந்தாலும், அல்லது பலவீனமாக இருந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-32333 , 35795 , 36593 , அஹ்மத்-3832 , இப்னு மாஜா-150 , முஸ்னத் பஸ்ஸார்-1845 , இப்னு ஹிப்பான்-7083 , ஹாகிம்-5238 , குப்ரா பைஹகீ-16897 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-16898 .

3 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஸஃத்-3655 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.