தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-3580

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விடும் நிலையை நான் காணக் கூடாது.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.

அறிவிப்பவர்: (ரஹ்)

மஸ்ரூக் (ரஹ்)

مسروق بن الأجدع

இறப்பு: ஹிஜ்ரி 63

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: மஸ்ரூக் பின் அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: அல்அஜ்ஃதா பின் மாலிக்

வம்சம்: ஹம்தான், வாதஆ

புனைப்பெயர்: அபூ ஆயிஷா

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 63

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

மஸ்ரூக் ரஹ் அவர்கள் அபூ ஆயிஷா என்ற குன்யாவால் அறியப்பட்டவர். இவர் மிகப் பலமான தாபிஈ ஆவார். கூஃபாவைச் சேர்ந்த இவர், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

ஷஅபீ, இப்ராஹீம் அந்நகஈ போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் ஒரு ஃபிக்ஹ் அறிஞராகவும், சிறந்த வணக்கசாலியாகவும் திகழ்ந்தார். ஹிஜ்ரி 63ல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப், உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீ தாலிப், முஆத் பின் ஜபல், கப்பாப் பின் அல்அரத், இப்னு மஸ்ஊத், உபை பின் கஅப், அல்முகீரா பின் ஷுஃபா, ஸைத் பின் ஸாபித், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ், ஆயிஷா பின்த் அபீபக்ர், உம்மு ஸலமா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹம்மத் பின் அல்முன்தஷிர் பின் அஜ்ஃதா, ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, முஸ்லிம் பின் ஸபீஹ் அல்ஹம்தானீ, அபூ அள்ளஹா, ஆமிர் அஷ்ஷஅபீ, இப்ராஹீம் அந்நகஈ, அபூ இஸ்ஹாக் அஸ்ஸுபைஈ, யஹ்யா பின் வதாப், அப்துர்ரஹ்மான் பின் மஸ்ஊத், மக்ஹூல் அஷ்ஷாமீ, குமைர் பின்த் அம்ர் அல்கூஃபியா

வேறு பெயர்கள்: மஸ்ரூக் பின் அஜ்ஃதா, மஸ்ரூக் பின் அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (11018) · Should verify


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا أُلْفِيَنَّكُمْ تَرْجِعُونَ بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-3580.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-3484.



எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: நஸாயீ-4127 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.