தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4127

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4127. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.

அறிவிப்பவர்: (ரலி)

இப்னு மஸ்வூத் (ரலி)

عبد الله بن مسعود

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பின் ஃகாஃபில் பின் ஹபீப் பின் ஷம்க் பின் ஃபார் பின் மக்ஸூம் பின் ஸாஹிலா பின் காஹில் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஸ்வூத் பின் ஃகாஃபில்

வம்சம்: அல்ஹுதல், பனூ ஸுஹ்ரா கூட்டாளியாவார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் பயணங்களில் உடன் செல்பவராகவும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குணநலன்களில் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டார்கள்.

குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதக்கூடியவராகவும், அதன் விளக்கங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்கள். ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), ஸஃத் பின் முஆத், உமர் பின் கத்தாப் (ரலி), ஸஃப்வான் பின் அஸ்ஸால்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ், அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அப்துல்லாஹ் பின் உத்பா, அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அல்கமா பின் கைஸ், அல்அஸ்வத் பின் யஸீத், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அபூ அப்துர்ரஹ்மான், இப்னு உம்மி அப்த்


ஆதாரம்: muslimscholars.info (16) · Should verify


أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4127.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4082.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் பின் ஸாலிம்-ஷுஃபா பின் அய்யாஷ் வயதான காலத்தில் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டதால் ஹதீஸை அறிவிப்பதில் அதிகமாக தவறு ஏற்பட்டதால் இவரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    போன்றோர் விமர்சித்துள்ளனர்.
  • இவர் அஃமஷ் வழியாக அறிவிக்கும் செய்தி பற்றி கேட்கப்படும் போது அனைவரின் வழியாகவும் இவர் அறிவிப்பதில் பலவீனமானவர் என்று  இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் கூறினார்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/492)

  • இதன் அறிவிப்பாளர் தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் அஃமஷ் வழியாக அறிவிக்கும் மற்ற பலமானவர்களான அபூமுஆவியா போன்ற பலர் இந்த செய்தியை முர்ஸலாக-நபித்தோழரை விட்டு அறிவித்துள்ளனர் என்பதால் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-5/241)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூபக்ர் பின் அய்யாஷ் —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    (அபுல்லுஹா) —> மஸ்ரூக் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1959 , 1960 , குப்ரா நஸாயீ-3579 , நஸாயீ-4127 , அல்முஃஜமுல் கபீர்-10301 ,

  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    (அபுல்லுஹா) —> மஸ்ரூக் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-3578 , நஸாயீ-4126 ,

  • ஹஃப்ஸ், அபூமுஆவியா, யஃலா —> அஃமஷ் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    (அபுல்லுஹா) —> மஸ்ரூக் (ரஹ்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37187 , குப்ரா நஸாயீ-3580 , 3581 , நஸாயீ-4128 , 4129 ,

மேலும் பார்க்க: புகாரி-6166 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.