தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6166

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) ‘உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

தனது ஆசிரியரான வாகித் பின் முஹம்மத் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று சந்தேகமாக கூறியதாக ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார் என்று மேற்கண்ட காலித் பின் ஹாரிஸின் அறிவிப்பில்  இடம்பெற்றுள்ளது.

ஷுஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து நள்ரு பின் ஷுமைல் அறிவிக்கும் அறிவிப்பில் ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்களின் மகனான உமர் பின் முஹம்மத் அவர்களின் அறிவிப்பில் ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம்பெற்றுள்ளது.

(எனவே இந்த சந்தேகம் முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது)

அத்தியாயம்: 78

(புகாரி: 6166)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَبِي، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ – قَالَ شُعْبَةُ: شَكَّ هُوَ – لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ” وَقَالَ النَّضْرُ، عَنْ شُعْبَةَ: «وَيْحَكُمْ» وَقَالَ عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ: «وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ


Bukhari-Tamil-6166.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6166.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் ஸைத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: புகாரி-616668687077 , முஸ்லிம்-120 , இப்னு மாஜா-3943 , அபூதாவூத்-4686 , நஸாயீ-4125 , …

  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அபுல் லுஹா —> மஸ்ரூக் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: குப்ரா நஸாயீ-3578 , நஸாயீ-4126 ,

2 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-121 .

3 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-4130 .

4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-4127 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.