தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5119

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், “உனது கூட்டத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்கு நீ துணைபுரிவது (தான் இனவெறி ஆகும்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(அபூதாவூத்: 5119)

حَدَّثَنَا مُحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ بِشْرٍ الدِّمَشْقِيُّ، عَنْ بِنْتِ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا، يَقُولُ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5119.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4456.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஸலமா பின் பிஷ்ர் வழியாக வரும் சில செய்திகளை ஹஸன் தரம் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இதற்கான காரணம் ஸலமா பின் பிஷ்ர் அவர்கள், குஸைலா பின்த் வாஸிலா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார். அப்பாத் பின் கஸீரிடமும் ஹதீஸைக் கேட்டுள்ளார். மேலும் இவரிடமிருந்து முஹம்மது பின் யூஸுஃப் அல்ஃபிர்யாபீ ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட செய்தியைக் கூறியுள்ளார்.

[4890] سلَمةُ بنُ بِشرٍ الدِّمَشقيُّ .
سمعَ خُصَيلةَ بنتَ واثِلةَ، عن أَبِيها، في العَصبيَّةِ.
سمعَ مِنه محمدُ بنُ يوسفَ.
وقالَ لي محمدٌ، أَبُو يحيى: حدَّثنا داودُ بنُ رُشَيدٍ، حدَّثنا سلَمةُ بنُ بِشرٍ، حدَّثنا عباد بن كثيرٍ، حدَّثتْني خُصَيلةُ بنتُ واثلةَ، سمِعتْ أَباها: قلتُ للنبيِّ -صلى اللَّه عليه وسلم-

(நூல்: தாரீகுல் கபீர்-4890)

(இதன்பிரகாரம் இவர் அப்பாத் பின் கஸீரிடமிருந்து அறிவிக்கும் செய்தி அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித் என்ற வகையில் சேரும்)

உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், அப்பாத் பின் கஸீரிடமிருந்து வரும் செய்தியைக் கூறிவிட்டு வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாகவும், மற்றவர்களின் வழியாகவும் இதைவிட நல்ல செய்தி வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (அள்ளுஅஃபாஉல் கபீர்-3/141). அதுதான் இது என்று ஷுஐப்அல்அர்னாவூத் அவர்கள் கூறியுள்ளார்.

  • புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் ஸலமா பின் பிஷ்ர் என்ற பெயரில் இருவரைக் கூறியுள்ளனர். ஒருவர் ஸலமா பின் பிஷ்ர் பின் ஸைஃபீ ஆவார். இவரின் ஆசிரியர் ஸலமா பின் பிஷ்ர் பின் அப்துல்அஸீஸ். மாணவர் யஃகூப் பின் இஸ்ஹாக்.
  • மற்றொருவர் ஸலமா பின் பிஷ்ர் அத்திமிஷ்கீ ஆவார். இவர் அப்பாத் பின் கஸீர், குஸைலா பின்த் வாஸிலா ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து தாவூத் பின் ருஷைத் அல்ஹாஷிமீ, முஹம்மது பின் யூஸுஃப் அல்ஃபிர்யாபீ ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இதை ஆய்வு செய்த இப்னு அஸாகிர், ஸலமா பின் பிஷ்ர் அத்திமிஷ்கிடமிருந்து அறிவிக்கும் தாவூத் பின் ருஷைத் சில சமயம் தனது ஆசிரியரை ஸலமா பின் ஸைஃபீ என்று (பாட்டனார் பெயருடன் இணைத்து) குறிப்பிட்டுள்ளார் என்பதால் இருவரும் ஒருவரே என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு திமிஷ்க்-22/9, தஹ்தீபுல் கமால்-11/266, தஹ்தீபுத் தஹ்தீப்-2/70)

  • ஸலமா பின் பிஷ்ருவை (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர் என்று கூறியிருப்பதால்) இப்னுஹஜர் அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/399)

இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார்.

  • இவ்வாறே வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்களின் மகளான ஃபஸீலா-ஃபுஸைலா-ஜமீலா-கஸீலா-குஸைலா என்று பல பெயரில் கூறப்படுபவரையும் (இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர் என்று கூறியிருப்பதால்) இப்னுஹஜர் அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1368)

இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார் என்பதால் ஷுஐப் அல்அர்னாவூத் அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(ஆய்வுக்காக: இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் தரச்சான்று பற்றி
-மாஹிர் யாஸீன் ஃபஹ்ல்)

  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், ஸலமா பின் பிஷ்ர், குஸைலா ஆகியோரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    மக்பூல் தரத்தில் கூறியிருப்பதாலும், ஸலமா பின் பிஷ்ர் தத்லீஸ் செய்து அதாவது அப்பாத் பின் கஸீரை மறைத்து இந்த செய்தியை அறிவித்துள்ளார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறியிருப்பதாலும் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார். (மீஸானுல் இஃதிதால்-2/188)

(நூல்: நக்த் நுஸூஸுன் ஹதீஸிய்யதுன் ஃபிஸ்ஸகாஃபதில் ஆம்மஹ்-பக்கம்-18, ஸஹீஹ் ளயீஃப் அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஜாமிஉஸ் ஸகீர்-3863)

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் தத்லீஸ் செய்துள்ளார் என்று கூறியிருப்பது குஸைலாவின் பெயரைக் கூறாமல் வாஸிலா (ரலி) அவர்களின் மகள் என்று கூறியதைத்தான் குறிக்கும். அப்பாத் பின் கஸீரை மறைத்து அறிவித்துள்ளார் என்பதைக் குறிக்காது என்றும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் வாசகத்திலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.