தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3949

 

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3949. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை. மாறாக ஒருவர், தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது தான் இனவெறி ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(இப்னுமாஜா: 3949)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ الْيَحْمِدِيُّ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ، عَنِ امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فُسَيْلَةُ، قَالَتْ: سَمِعْتُ أَبِي يَقُولُ،

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا، وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3949.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3947.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ-அஷ்ஷாமீ என்பவர் மிகப் பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஸலமா பின் பிஷ்ர் வழியாக வரும் சில செய்திகளை ஹஸன் தரம் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார். (பார்க்க: அபூதாவூத்-5119)

1 . இந்தக் கருத்தில் வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்பாத் பின் கஸீர் —> ஃபஸீலா-ஃபுஸைலா-ஜமீலா-கஸீலா-குஸைலா —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) (அபூ ஃபஸீலா)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37374 , அஹ்மத்-16989 , 17472 , அல்அதபுல் முஃப்ரத்-396 , இப்னு மாஜா-3949 , அல்முஃஜமுல் கபீர்-955 ,

  • ஸலமா பின் பிஷ்ர் —> ஃபஸீலா-ஃபுஸைலா-ஜமீலா-கஸீலா-குஸைலா —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) (அபூ ஃபஸீலா)

பார்க்க: அபூதாவூத்-5119 , (மீஸானுல் இஃதிதால்-2/188)

  • வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> ஸதகா பின் யஸீத் —>  குஸைலா —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-235-2 ,

  • மஹ்மூத் பின் காலித் —> குஸைலா —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-236 , குப்ரா பைஹகீ-21076 ,

  • அலாஉ பின் ஸஃலபா —> அபுல் மலீஹ் —> (அபூ ஃபஸீலா) வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-7492 , அல்முஃஜமுல் கபீர்-193-2 ,

  • இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் —> தாவூஸ் —> வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-197 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸுனன் ஸகீர் பைஹகீ-3380 .

2 comments on Ibn-Majah-3949

  1. ஜசாகல்லாஹ் சகோதரர்..அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.