ஜாஹிமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் போருக்கு வர நாடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ”ஆம்” என்று கூறினேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ”உன்னுடைய தாயின் இருகால்களை (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். அங்கு தான் சொர்க்கம் இருக்கிறது” என்று கூறினார்கள்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25411)حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ مُعَاوِيَةَ بْنِ جَابِرٍ السُّلَمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ:
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ الْجِهَادَ مَعَكَ فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: فَقَالَ: «أُمُّكَ حَيَّةٌ؟» قُلْتُ: نَعَمْ، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الْزَمْ رِجْلَيْهَا فَثَمَّ الْجَنَّةُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25411.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
- மேற்கண்ட செய்தி அனைத்து முஸன்னஃப் பின் அபூஷைபாவின் பிரதிகளிலும் இரண்டு இடங்களில் வந்துள்ளது. இரண்டு இடங்களிலும் வரும் அறிவிப்பாளர்தொடரின் கருத்து ஒன்றாக இருந்தாலும் அரபு வார்த்தை அமைப்பு வெவ்வேறாக வந்துள்ளது.
முதல் இடத்தில் வரும் வாக்கிய அமைப்பு:
முஹம்மது பின் தல்ஹா தன் தந்தை தல்ஹா பின் முஆவியாவிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ مُعَاوِيَةَ بْنِ جَاهِمة السُّلَمِيِّ ، عَنْ أَبِيهِ ، قَالَ : أَتَيْتُ …
இரண்டாவது இடத்தில் வரும் வாக்கிய அமைப்பு:
முஹம்மது பின் தல்ஹா தன் தந்தை தல்ஹா பின் முஆவியாவிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ ، عَنْ أَبِيهِ طَلْحَةَ بْنِ مُعَاوِيَةَ السُّلَمِيِّ ، قَالَ : جِئْتُ
- இதன் அறிவிப்பாளர்தொடரில் தவறு ஏற்பட்டுள்ளது என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார். இந்த அறிவிப்பாளர்தொடர் முஹம்மது பின் தல்ஹா —> (தல்ஹா பின் முஆவியா) —> முஆவியா பின் ஜாஹிமா —> இவரின் தந்தை (ஜாஹிமா) என்று இருக்க வேண்டும்.
முஹம்மது பின் தல்ஹா என்பதற்கு பின் அன்-عن- என்று இருக்க வேண்டும். ஆனால் இப்னு-ابن- என்று வந்துள்ளது. இது தவறாகும். அன் அபீஹி-عَنْ أَبِيهِ-என்ற வார்த்தை ஒரு இடத்தில் இறுதியிலும் வேறு இடத்தில் தல்ஹா பின் முஆவியா என்ற வார்த்தைக்கு முன்பும் வந்துள்ளது. இதுவும் தவறாகும்.
(நூல்: அல்இஸாபா-2/141)
(இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் இஸாபாவில் (தல்ஹா பின் முஆவியா) என்பது விடுப்பட்டுள்ளது. அதற்குமேல் உள்ள வார்த்தை அமைப்பில் இருந்து இது தெரிகிறது.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் கருத்து மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் மூலம் தல்ஹா பின் முஆவியா நபித்தோழர் என்று கருதப்பட்டு விடுவார். இவர் நபித்தோழர் அல்ல. இவரின் தந்தை முஆவியா பின் ஜாஹிமா என்பவரே நபித்தோழரா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது)
- இந்த செய்தியை முஹம்மது பின் தல்ஹா அவர்களிடமிருந்து முஹம்மது பின் இஸ்ஹாக், இப்னு ஜுரைஜ் ஆகிய இருவர் அறிவித்துள்ளனர். இருவரில் இப்னு ஜுரைஜ் வழியாக வரும் சில அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.
மேலும் பார்க்க: நஸாயீ-3104 .
சமீப விமர்சனங்கள்