தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3104

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே நான் போருக்குச் செல்ல நாடுகிறேன். உங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். நபியவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர் ”ஆம்” என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ”உன்னுடைய தாயைப் (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். நிச்சயமாக சொர்க்கமாகிறது அவளுடைய இரு பாதங்களின் கீழ்தான் இருக்கிறது”. என்று கூறினார்கள்.

(நஸாயி: 3104)

أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ،

أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3053.
Nasaayi-Shamila-3104.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3069.




  • இதன் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாகக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இப்னு ஜுரைஜ் அவர்கள், ஜாஹிமா (ரலி) அவர்களை கூறி அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.
  • மேலும் இப்னு இஸ்ஹாக் வழியாக வரும் செய்திகளில் ஹிஷாம் —> முஹாரிபீ —> இப்னு இஸ்ஹாக் —> முஹம்மது பின் தல்ஹா —> முஆவியா பின் ஜாஹிமா என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1227, 7/75)

இந்த செய்தியை முஹம்மது பின் தல்ஹா அவர்களிடமிருந்து முஹம்மது பின் இஸ்ஹாக், இப்னு ஜுரைஜ் ஆகிய இருவர் அறிவித்துள்ளனர். இருவர் வழியாக பலரும் பலவாறு அறிவித்துள்ளனர்.

1 . முஹம்மது பின் இஸ்ஹாகின் அறிவிப்புகள்:

2 . இப்னு ஜுரைஜின் அறிவிப்புகள்:

..

ஆய்வின் சுருக்கம்:

1 . முஹம்மது பின் தல்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் இஸ்ஹாக், இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரில் இப்னு ஜுரைஜே மிக நினைவாற்றல் உள்ளவர். எனவே முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பில் தவறு உள்ளது.

2 . இவ்வாறே இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அல்அஃவர் அவர்களே மிகவும் பலமானவராக இருப்பதை நான் காண்கிறேன் என்று முஅல்லா பின் மன்ஸூர் அர்ராஸீ அவர்கள் கூறினார். அவ்வாறே இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன்; எனவே  இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அல்அஃவர் அவர்களே முன்னுரிமை பெற்றவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுத் திர்மிதீ-2/849)

எனவே இவரும் இவரைப் போன்று அறிவிப்பவர்களின் அறிவிப்பாளர்தொடரான இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> முஆவியா பின் ஜாஹிமா —> ஜாஹிமா என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39617-முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • என்றாலும் இவர் பற்றி இவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் பேரனின் மகன் (கொள்ளுப்பேரன்) என்றும், உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள், இவரை மக்காவின் ஆளுனராக நியமித்து இருந்தார் என்றும், இவர் வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர், இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    இப்னு ஜுரைஜ், ஸுஹ்ரீ, முஹம்மத் பின் இஸ்ஹாக் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்றும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் தனது தாரீகுல் கபீரில் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-357, 1/401)

  • மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-6017, 1/857)

  • மேலும் இதில் வரும் ராவீ-20202-தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • என்றாலும் இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். மதீனாவைச் சேர்ந்த சிறந்த மனிதர் என்றும், ஸதூக்-நம்பகமானவர் என்றும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/251, அல்காஷிஃப்-3/43, தக்ரீபுத் தஹ்தீப்-1/464)

இது போன்ற வகையினர் ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர்கள் என்பதால் இந்த செய்தி ஹஸன் தரமாகும்.

இந்தக் கருத்தில் ஜாஹிமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் இஸ்ஹாக் —> முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் முஆவியா 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25411 , 33460 , அல்முஃஜமுல் கபீர்-8162 ,

  • முஹம்மது பின் இஸ்ஹாக் —> முஹம்மது பின் தல்ஹா —> முஆவியா பின் ஜாஹிமா

பார்க்க: இப்னு மாஜா-2781 ,

  • இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9290 ,

  • இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> முஆவியா பின் ஜாஹிமா —> ஜாஹிமா

பார்க்க: அஹ்மத்-15538 , இப்னு மாஜா-2781 , நஸாயீ-3104 , குப்ரா நஸாயீ-4297 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2132 , ஹாகிம்-2502 , 7248 , குப்ரா பைஹகீ-17832 ,

…ஷுஅபுல் ஈமான்-7448 , 7449 , 7450 ,

  • இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> முஆவியா பின் ஜாஹிமா

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2133 ,

  • இப்னு ஜுரைஜ் —> முஹம்மது பின் தல்ஹா பின் யஸீத் பின் ருகானா —> முஆவியா பின் ஜாஹிமா —> ஜாஹிமா

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2202 ,

  • ஸுலைமான் பின் ஹர்ப் —> முஹம்மது பின் தல்ஹா —> முஆவியா பின் திர்ஹம் —> திர்ஹம்

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-4211 ,

இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: புகாரி-3004 ,

…இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

3 comments on Nasaayi-3104

  1. இது மிக பலவீனமான செய்தி என்றும் ஹஸன் தரம் என்றும் இருவிதமான மாற்று கருத்து உள்ளது…இதன் ஹஸன் தரம் செய்தியா?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.