தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6735

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைவிட அதிகப்படுத்தக் கூடாது. இதனால் கப்ர் மிகவும் உயரமாகிவிடும்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் (மண்ணை) அதிகப்படுத்துவதையும் அல்லது அதை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

(பைஹகீ-குப்ரா: 6735)

بَابُ لَا يُزَادُ فِي الْقَبْرِ عَلَى أَكْثَرَ مِنْ تُرَابِهِ لِئَلَّا يَرْتَفِعَ جِدًّا

أَخْبَرَنَا أَبُو صَالِحِ بْنُ أَبِي طَاهِرٍ الْعَنْبَرِيُّ، أنبأ جَدِّي يَحْيَى بْنُ مَنْصُورٍ الْقَاضِي، ثنا أَحْمَدُ بْنُ سَلَمَةَ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أنبأ حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، وَعَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

نَهَى أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ

وَرَوَاهُ أَبَانُ بْنُ أَبِي عَيَّاشٍ، عَنِ الْحَسَنِ وَأَبِي نَضْرَةَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” وَلَا يُزَادُ عَلَى حُفَيْرَتِهِ التُّرَابُ ” وَفِي الْحَدِيثِ الْأَوَّلِ كِفَايَةٌ، أَبَانُ ضَعِيفٌ، وَرُوِيَ كَمَا


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6735.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-6224.




  • இந்த செய்தியின் முதல் அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்றும், இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஸுலைமான் பின் மூஸா என்றும் வந்துள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்பதே சரியானதாகும்.
  • இதனடிப்படையில் இரண்டாவது அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/111)

(பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் ஆசிரியரான அபூஸாலிஹ் பின் அபூதாஹிர் (அல்அ(ன்)ம்பரு பின் தய்யிப் என்பவர் பற்றி சிலர் இவரைப் பற்றிய குறிப்பு கிடைக்கவில்லை என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கூறியிருந்தாலும் வேறு சிலர் இவரின் பெயரை விளக்கியும், பாராட்டியும் கூறியுள்ளனர். (அஸ்ஸல்ஸபீலுன் நகிய்யு ஃபீ தராஜிமி ஷுயூகில் பைஹகீ-140, பக்கம்-519)

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.